கொவேக்ஸ் திட்டத்தில் கீழ் இலங்கைக்கு நன்கொடை அடிப்படையில் ஒரு லட்சம் ஃபைசர் தடுப்பூசிகளை அமெரிக்கா வழங்கியுள்ளது.
இந்த தடுப்பூசிகள் இன்றைய தினம் (28) நாட்டை வந்தடைந்துள்ளதாக இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.
இந்த தடுப்பூசிகளை தாம் இலங்கை மக்களுக்கு இலவசமாக வழங்கியுள்ளதாகவும் தூதரகம் குறிப்பிடுகின்றது.
உயிர்களை பாதுகாத்து, பொருளாதாரத்தை மீள கட்டியெழுப்புவதற்கு அமெரிக்க உறுதிப்பூண்டுள்ளதாக அமெரிக்க தூதரக டுவிட்டர் தள பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.