திருகோணமலையில் அமைந்துள்ள tks finance லிமிட்டெட்டிற்கு நிதித் தொழிலை நடத்துவதற்கு மத்திய வங்கியினால் வழங்கப்பட்ட உரிமம் இரத்துச் செய்யப்பட்டள்ளது.
அத்துடன், குறித்த நிறுவனம் மத்திய வங்கி அதிகாரிகளினால் இன்று சீல் வைக்கப்பட்டு மூடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் குறித்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், இந்த நிறுவனத்தின் அனைத்து வாடிக்கையாளர்களும் தமது ஒப்பந்த ரீதியான கடப்பாடுகளை அவர்களது உடன்படிக்கைக்கு அமைய செலுத்துமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய செலான் வங்கி, கொமர்சியல் வங்கி, மக்கள் வங்கி அகியவற்றில் தமது தொகைகளை செலுத்த முடியுமென குறிப்பிடப்பட்டுள்ளது.