இன்று திருமலை நகரப்பகுதிகளில் வழமைக்குமாறாக பெரும்பாலான கடைகள் பூட்டப்பட்டுள்ளன. இதனால் நகரம் முடங்கிய நிலையில் காணப்படுகின்றது.
இதற்கு காரணம் நேற்று முன்தினம் (சனிக்கிழமை) எழுந்தமானமாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் 19 கடைகளை சேர்ந்த ஊழியர்களுக்கு கொரோனா தொற்றுதி இருப்பது தெரியவந்துள்ளது.
இதனை தொடர்ந்து இரு தினங்களுக்கு தற்காலிகமாக கடைகளை பூட்டுமாறு அறிவுறுத்தப்பட்டதை தொடர்நது மேலும் தொற்று பரவுவதை தடுப்பதற்கு மேலதிக கடைகள் பூட்டப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
இதனால் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய இயலாமல் சிரமத்தை எதிர்கொண்டுள்னர்.

