அண்மையில் இலங்கையில் நடைபெற்ற எல்.பி.எல். கிரிக்கெட் தொடரில் ஆட்டநிர்ணயம் இடம்பெற்றுள்ளமை குறித்த தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
கொலம்போ கிங்ஸ் அணியைச் சேர்ந்த வீரர் ஒருவரே இந்த சதியில் ஈடுபட்டதாக முறைப்பாடு பதிவாகியிருக்கின்றது.
சக வீரர்களால் வழங்கப்பட்டுள்ள இந்த முறைப்பாட்டின் படி விசாரணைகளை அதிகாரிகள் தொடங்கியிருக்கின்றனர்.
வாக்குமூலம் பதிவு செய்வதற்காக சந்தேக நபராகிய குறித்த வீரருக்கு அதிகாரிகள் அழைப்பு விடுத்திருக்கின்றனர்.
இருந்த போதிலும் அந்த அழைப்பை அவர் நிராகரித்து வருவதாக சொல்லப்படுகின்றது.