இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே இலங்கை – இந்திய எண்ணெய் நிறுவனத்தின் தாங்கிகளை பார்வையிட்டுள்ளார். திருகோணமலைக்கு மேற்கொண்ட விஜயத்தின் போதே அவர் இதனைப் பார்வையிட்டுள்ளார்.
குறித்த எண்ணெய் தாங்கிகளின் மேல் பகுதிகளையும் உயர்ஸ்தானகர் பார்வையிட்டதோடு, இதன் போது இவற்றின் அபிவிருத்திகள் தொடர்பில் அங்குள்ள பொறியலாளர்களுடன் கலந்துரையாடினார்.
திருகோணமலை எண்ணெய் தாங்கிகள் முழுவதையும் இலங்கையின் நிர்வாகத்தின் கீழ் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அண்மையில் இலங்கை தெரிவித்திருந்த நிலையில் அதனை நிராகரித்த இந்தியா கூட்டு முயற்சியில் அபிவிருத்தி செய்வதாக அறிவித்திருந்தது.
எனினும் தாம் கூறிய கருத்துக்கள் திரிபுபடுத்தப்பட்டுள்ளதாக பின்னர் இலங்கை அரசாங்கம் அறிவித்திருந்த நிலையில் , கடந்த் 2ம் திகதி நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் திருகோணமலை எண்ணெய் தாங்கிகள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.