Pearl One News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • உலகம்
    • இந்தியா
    • விளையாட்டு
    • சினிமா
  • திருகோணமலை
  • நாவல்
    • சரித்திர நாவல்
    • சிறுகதை
  • சமையல்
  • சுகமான வாழ்வு
  • இன்றைய ராசிபலன்
  • ENGLISH
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • உலகம்
    • இந்தியா
    • விளையாட்டு
    • சினிமா
  • திருகோணமலை
  • நாவல்
    • சரித்திர நாவல்
    • சிறுகதை
  • சமையல்
  • சுகமான வாழ்வு
  • இன்றைய ராசிபலன்
  • ENGLISH
No Result
View All Result
Pearl One News
No Result
View All Result
Home ஆன்மீகம் ஜோதிடம்

27 நட்சத்திரங்களுக்கும் அந்த நட்சத்திரம் இடம் பெற்றிருக்கும் ராசியின் அடிப்படையில் சிறப்புப் பலன்

Anu by Anu
February 12, 2021
in ஜோதிடம்
4 min read
13
SHARES
125
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
இன்றைய ராசி பலன்கள் (24 ஜூலை 2020)

மேஷராசி அன்பர்களே!

காரிய அனுகூலமான நாள். புதிய முயற்சிகளை மேற்கொள்வதற்கு உகந்த நாள். தேவையான பணம் கையில் இருப்பதால் செலவுகளைச் சமாளிப்பதில் சிரமம் எதுவும் இருக் காது. உறவினர்களால் குடும்பத்தில் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பணியாளர்களாலும், பங்குதாரர்களாலும் சில சங்கடங்களைச் சமாளிக்க வேண்டி வரும். சக வியாபாரிகளால் மனதில் சஞ்சலம் ஏற்பட்டு நீங்கும். இன்று நீங்கள் முருகப்பெருமானை வழிபட சங்கடங்கள் நீங்கும்.

அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தைவழியில் ஆதாயம் கிடைக்கும்.

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பிள்ளைகளின் தேவைகளுக்காக செலவு செய்ய நேரிடும்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும்.

ரிஷபராசி அன்பர்களே!

எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். சிலருக்கு பிள்ளைகள் மூலமும் பண வரவுக்கு வாய்ப்பு உண்டு. வாழ்க்கைத்துணையால் செலவுகள் ஏற்படும். மற்றவர்களுடன் வீண் விவாதம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது. தந்தையின் உடல்நலனில் கவனம் செலுத்தவும். பணிச் சுமை குறையும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். ஆனால், பணியாளர்களால் பிரச்னை ஏற்படும். பங்குதாரர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைப்பது தாமதமாகும். இன்று சிவபெருமானை வழிபட முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் செலவுகளால் கடன் வாங்க நேரிடும்.

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கும் சுபச் செலவுகள் ஏற்படவும் வாய்ப்பு உண்டு.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவழியில் செலவுகள் ஏற்படக்கூடும்.

மிதுனராசி அன்பர்களே!

புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். வழக்கமான பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தவும். சிலருக்கு மனதில் இனம் தெரியாத சோர்வு உண்டாகலாம். அக்கம் பக்கத்தில் இருப்பவர்களுடன் அனுசரணையாக நடந்துகொள்ளவும். உடல்நலனில் கவனம் தேவை. பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படும். குடும்பப் பெரியவர்களிடம் பேசும்போது பொறுமை மிக அவசியம். வியாபாரம் சற்று சுமாராகத்தான் இருக்கும். பணியாளர்களை அனுசரித்துச் செல்லவும். மகாவிஷ்ணு வழிபாடு சிறப்பு.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணை மூலம் பொருள் சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டு.

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது அவசியம்.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் அனுகூலம் உண்டாகும்.

கடகராசி அன்பர்களே!

தந்தைவழி உறவுகளால் சங்கடம் ஏற்படக்கூடும். தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சகோதரர்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். வாழ்க்கைத் துணையின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் சிலருக்கு எதிர்பாராத பொருள்சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டாகும். குடும்பப் பொறுப்புகளை உற்சாகமாக நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் பணியாளர்களின் ஒத்துழைப்பு பாராட்டும்படி இருக்கும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். ஆஞ்சநேயரை வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய முயற்சி சாதகமாக முடியும்.

பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் சில சங்கடங்கள் ஏற்படும்.

ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்கும்.

சிம்மராசி அன்பர்களே!

அதிர்ஷ்டகரமான நாள். இன்று நீங்கள் எடுக்கும் புதிய முயற்சி வெற்றிகர மாக நிறைவேறும். தொடங்கிய காரியங்கள் அனுகூலமாக முடியும். உங்களுடைய முயற்சிக்கு வாழ்க்கைத்துணை பக்கபலமாக இருப்பார். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும். பங்குதாரர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். இன்று அம்பிகையை வழிபடுவது நன்று.

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வீண் அலைச்சலைத் தவிர்ப்பது நல்லது.

பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வார்த்தைகளில் நிதானம் தேவை.

கன்னிராசி அன்பர்களே!

சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டாலும் அதற்கேற்ப பணவரவும் இருப்பதால் பிரச்னை எதுவும் இருக்காது. எதிரிகள் வகையில் எச்சரிக்கையாக இருக்கவும். உறவினர்களிடம் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். மற்றவர்களிடம் வீண் விவாதத்தில் ஈடுபடவேண்டாம். வியாபாரத்தில் விற்பனை சற்று சுமாராகத்தான் இருக்கும். பணியாளர்களைத் தட்டிக்கொடுத்து வேலை வாங்கவும். துர்கையை வழிபட எதிரி களால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அவசர முடிவுகளைத் தவிர்ப்பது நல்லது.

அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த செய்தி கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கைத்துணையை அனுசரித்துச் செல்வது அவசியம்.

துலாராசி அன்பர்களே!

உற்சாகமான நாள். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதி கரிக்கும்.வாழ்க்கைத்துணையின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். முக்கியமான முடிவுகள் எதையும் இன்று எடுக்கவேண்டாம். பிள்ளைகள் பிடிவாதம் பிடித்தாலும், விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. தாயாரின் உடல் நலனில் கவனம் தேவை. வியாபாரத்தில் விற்பனை வழக்கம் போலவே நடைபெறும். உங்கள் முயற்சிகளுக்கு பங்குதாரர்களின் ஆதரவு கிடைக்கும். இன்று விநாயகரை வழிபட மன மகிழ்ச்சி அதிகரிக்கும்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.

சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும்.

விருச்சிகராசி அன்பர்களே!

எதிர்பாராத பணவரவுடன், திடீர் செலவுகளும் ஏற்படும். குடும்பத்தின ரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். மாலையில் குடும்பத்தினருடன் உற்சாகமாகப் பேசி மகிழ்வீர்கள். எதிரிகள் பணிந்து போவார்கள். காரியங்க ளில் சிறுசிறு தடைகள் உண்டாகும். உறவினர்களால் ஏற்பட்ட மறைமுகத் தொல்லைகள் மறை யும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் அனுசரணையாக நடந்துகொள்ளவும். பைரவர் வழிபாடு நற்பலன்களை அதிகரிக்கச் செய்யும்..

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும்.

அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் செலவுகள் ஏற்படக்கூடும்.

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும்.

தனுசுராசி அன்பர்களே!

புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். சகோதர வகையில் எதிர் பார்க்கும் காரியம் முடிவதில் தாமதம் உண்டாகும். சிலருக்கு வயிறு தொடர்பான பிரச்னைகள் ஏற்படும். பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. தந்தை வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். வாழ்க்கைத்துணையால் சில சங்கடங்கள் ஏற்பட்டு மனச் சஞ்சலத்தை ஏற்படுத்தும். பொறுமை மிக அவசியம். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம்போலவே இருக்கும். இன்று நீங்கள் மகாலட்சுமியை வழிபடுவது நன்று.

மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல் நலனில் கவனமாக இருக்கவும்.

பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் பெருமையும் மகிழ்ச்சியும் உண்டாகும்.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு ஏற்படும்.

மகரராசி அன்பர்களே!

புதிய முயற்சிகளை பிற்பகலுக்குமேல் தொடங்குவது சாதகமாக முடியும். தாயின் உடல்நலனில் கவனம் தேவை. சிலருக்கு சிறிய அளவில் ஆரோக்கியக்குறைவு ஏற்பட்டு சரியாகும். உறவினர்களுடன் பேசும்போது வீண் மனவருத்தம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் பொறு மையைக் கடைப்பிடிக்கவும். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் சுமாராகத்தான் இருக்கும். இன்று மகாவிஷ்ணுவை வழிபட சங்கடங்கள் நீங்கும்.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத செலவுகள் கையிருப்பைக் குறைக்கும்.

திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்கள் மூலம் கிடைக்கும் செய்தி சங்கடம் தரும்.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் செலவுகள் ஏற்படக்கூடும்.

கும்பராசி அன்பர்களே!

பொறுமையுடன் இருக்கவேண்டிய நாள். எதிர்பாராத செலவுகளால் கடன் வாங்க நேரிடும். முக்கிய முடிவுகளை ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து எடுப்பது நல்லது. அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் அனுசரணையாக நடந்துகொள்வது மிக அவசியம். வாகனத் தில் செல்லும்போது கவனமாக இருக்கவும். வியாபாரத்தில் பணியாளர்களைத் தட்டிக்கொடுத்து வேலை வாங்கவும். பங்குதாரர்களால் வீண் செலவுகள் ஏற்படக்கூடும். இன்று தட்சிணாமூர்த்தி வழிபாடு நன்று.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் செலவுகள் ஏற்படும்.

சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் முக்கியமான விஷயங்களில் முடிவு எடுப்பதற்கு உகந்த நாள்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தையிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

மீனராசி அன்பர்களே!

கணவன் – மனைவிக்கிடையே இருந்த கருத்துவேற்றுமை நீங்கி, அந்நி யோன்யம் ஏற்படும். மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். காரியங்களில் வெற்றி உண்டாகும். புதிய முயற்சிகளை பிற்பகலுக்குமேல் தொடங்குவது நல்லது. இளைய சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் சாதகமாக முடியும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாக இருப்பது உற்சாகம் தரும். நரசிம்மர் வழிபாடு விருப்பங்களை நிறைவேறச் செய்யும்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் பணவரவு மகிழ்ச்சி தரும்.

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர் உதவியால் காரிய அனுகூலம் உண்டாகும்.

ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பொதுநலப்பணியில் பங்கேற்கும் வாய்ப்பு ஏற்படும்.

Previous Post

இன்றைய பஞ்சாங்கம் – 12.02.2021

Next Post

ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக வாக்களிக்குமா இந்தியா?

Next Post
ஜெனீவாவை அதிரவைக்க கடிதம் அனுப்பிய தமிழ்த் தலைமைகள்

ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக வாக்களிக்குமா இந்தியா?

விமலின் மனைவி CIDயில் முறைப்பாடு

விமலின் மனைவி CIDயில் முறைப்பாடு

பிரதமரின் மூன்று மகன்களும் துபாய் செல்கின்றனர்?
இலங்கை

பிரதமரின் மூன்று மகன்களும் துபாய் செல்கின்றனர்?

by Admin PearlOne
November 7, 2021
0

தற்போது கிரிக்கெட்டில் கவனம் செலுத்தி வரும் பிரதமரின் இளைய மகன் ரோஹித ராஜபக்ஷ துபாய் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பழைய செயின்ட் தாமஸ் கிரிக்கெட் அணியுடன் அவர் இந்தப்...

Read more
குளியாப்பிட்டி LOCKDOWN

நாட்டில் மீண்டும் பயணக் கட்டுப்பாடு? – சுகாதார பணிப்பாளர் வெளியிட்ட தகவல்

November 7, 2021
கர்தினாலுக்கு அரசாங்கம் மீது நம்பிக்கை இல்லையா? பீரிஸ் கூறும் தகவல்

மக்கள் வெளிநாட்டுக்கு செல்வது சிறந்த விடயம்..

November 7, 2021
  • சுகமான வாழ்வு
புதிய வகை கோவிட் தொற்று உங்களுக்கு ஏற்பட்டால் வீட்டிலேயே கண்டுபிடிப்பது எப்படி?
சுகமான வாழ்வு

புதிய வகை கோவிட் தொற்று உங்களுக்கு ஏற்பட்டால் வீட்டிலேயே கண்டுபிடிப்பது எப்படி?

by திருமலை தாசன்
April 27, 2021
0

இலங்கையில் தற்போது பரவும் கோவிட் மரபணுவின் விசேட அறிகுறியாக தொண்டை வலி மற்றும் ஏனைய அறிகுறிகள் ஏற்படுவதற்கும் முன்னர் நியுமோனியா ஏற்படுவதாக விசேட வைத்தியர் பிரசன்ன குணசேன...

Read more
சருமம், கேசம்… இதையெல்லாம் செய்யாதீங்க
சுகமான வாழ்வு

சருமம், கேசம்… இதையெல்லாம் செய்யாதீங்க

by Anu
December 26, 2020
0

சருமத்தை க்ளீன் ஆக்குறதா நினைச்சு, அடிக்கடி முகத்துக்கு ஸ்கிரப் பயன்படுத்தக் கூடாது. அது சருமத்தின் இயற்கையான எண்ணெய்ப்பசையை நீக்கிடும். மேலும், அது சருமத்துக்குக் கடுமையானதாவும் இருக்கும். முகத்தை...

Read more
  • சமையல்
பொட்டுக்கடலை முறுக்கு வீட்டிலேயே சுலபமாக செய்வது எப்படி?
சமையல்

பொட்டுக்கடலை முறுக்கு வீட்டிலேயே சுலபமாக செய்வது எப்படி?

by திருமலை தாசன்
July 25, 2020
0

முறுக்கு செய்ய வேண்டும் என்றால் அரிசியை கழுவி, உலர்த்தி, மாவு மில்லுக்கு சென்று, மாவு அரைத்து, அதன் பின்புதான் முறுக்கு செய்ய வேண்டும் என்ற எந்த அவசியமும்  இல்லை....

Read more
பேக்கரி போகாமல் வீட்லயே கேக் பாப்ஸ் எப்படி செய்யலாம்?
சமையல்

பேக்கரி போகாமல் வீட்லயே கேக் பாப்ஸ் எப்படி செய்யலாம்?

by திருமலை தாசன்
August 25, 2020
0

கேக் பாப்ஸ் உங்க பார்ட்டி கொண்டாட்டங்களை சுவைப்படுத்தக் கூடியது. இதை செய்ய நீங்கள் நிறைய செலவழிக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. மீதமுள்ள கேக் துகள்களைக் கொண்டே...

Read more
  • சினிமா
மேதகு; தொடக்கம்தான், முடிவல்ல – துணிச்சலுடன் வெளிவந்த தமிழ் திரைப்படம்!
சினிமா

மேதகு; தொடக்கம்தான், முடிவல்ல – துணிச்சலுடன் வெளிவந்த தமிழ் திரைப்படம்!

by Anu
June 30, 2021
0

உலகத் தமிழர்களின் ஒருங்கிணைப்புடன் இதுவரை யாரும் கையில் எடுக்காத உன்னத முயற்சியாக மேதகு திரைப்படம் வெளிவந்துள்ளது. புத்தம் புதியவர்களால் தீர்க்கமாக எப்படி இதைச் சாதித்துக் காட்ட முடிந்தது...

Read more
ஜகமே தந்திரம் திரைவிமர்சனம்
சினிமா

ஜகமே தந்திரம் திரைவிமர்சனம்

by Anu
June 19, 2021
0

நடிகர்தனுஷ்நடிகைஐஸ்வர்யா லட்சுமிஇயக்குனர்கார்த்திக் சுப்பாராஜ்இசைசந்தோஷ் நாராயணன்ஓளிப்பதிவுஸ்ரேயாஸ் கிருஷ்ணா மதுரையில் பரோட்டா கடையில் வேலை பார்த்து வருகிறார் நடிகர் தனுஷ். இவர் ஊரில் கொலை, கட்டப்பஞ்சாயத்து என சின்ன சின்ன...

Read more

Categories

  • English (3)
  • International (1)
  • Sports (2)
  • Sri Lanka (78)
  • Trincomalee (9)
  • Uncategorized (10)
  • அமானுஷ்யம் (8)
  • ஆன்மீகம் (102)
  • ஆரோக்கியம் (26)
  • இந்தியா (91)
  • இலங்கை (8,689)
  • உலகம் (263)
  • ஓகக்கலை (20)
  • சமையல் (9)
  • சரித்திர நாவல் (71)
  • சினிமா (98)
  • சிறுகதை (31)
  • சுகமான வாழ்வு (12)
  • ஜோதிடம் (291)
  • திருகோணமலை (451)
  • தொழில்நுட்பம் (7)
  • நீரிழிவு நோய் (3)
  • வணிகம் (32)
  • வரலாற்றுப் புதினம் (74)
  • விளையாட்டு (136)
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Contact us: editor@pearlonenews.com

© 2020 Pearl One News - Developed by WEBBRID.

No Result
View All Result
  • முகப்பு
  • சுகமான வாழ்வு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
    • சினிமா
  • திருகோணமலை
  • நாவல்
    • சரித்திர நாவல்
    • சிறுகதை
  • சமையல்
  • இன்றைய ராசிபலன்
  • ENGLISH

© 2020 Pearl One News - Developed by WEBBRID.