பெரியவர்கள் முதல் சிரியவர்கள் வரை தற்போது ஜங்க் ஃபுட் என்றழைக்கப்படும் பீட்சா,ப ர்கர் போன்றவற்றை விரும்பி சாப்பிடுகின்றனர். இவற்றின் விலை அதிகமாக இருந்தாலும் வாடிக்கையாளர்களை கவரும் யுக்திகளை கையாண்டு பல நிறுவனங்கள் சாதனை அடைந்துள்ளது. அதில் சிக்கன் பர்கர், வெஜ் பர்கர் கேள்வி பட்டிருப்பீங்க.. தங்க பர்கர் கேள்வி பட்டிருக்கீங்களா ?
ஆம். கொலம்பியாவில் உள்ள ஒரு உணவகம் புதிய விதமான பர்கரை அறிமுகம் செய்துள்ளது. டோரோ மெக்கோய் எனும் உணவகத்தில் 24 கேரட் தங்க பர்கரை அறிமுகம் செய்து அந்த உணவகம் அசத்தியுள்ளது. அங்கு வரும் வாடிக்கையாளர்கள் மிகவும் விரும்பி சாப்பிடும் உணவாக இந்த பர்கர் அமைந்துள்ளது. இந்த பர்கரின் பெயர் ‘ஓரோ மெக்கோய்’. இந்த பர்கர் 24 கேரட் தங்கத்தில் நனைக்கப்பட்டு பின்பு மீட் அல்லது பன்றி இறைச்சி, ஆகியவற்றை இரண்டு லேயருக்கும் இடையில் வைத்து டபுள் சீஸ் உடன் அட்டகாசமாக தயார் செய்யப்படுகிறது.
இந்த தங்க பர்கரின் விலை கொலம்பியன் பீசோஸ் மதிப்பில் 2,00,000 பீசோஸ், யூ எஸ் டாலர் மதிப்பில் 57 டாலர் மற்றும் இலங்கை மதிப்பில் 10,800 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
மேலும் இந்த உணவகத்தில் சாதாரண ஒரு பர்கரின் விலை 11 டாலராகும். இதன் இலங்கை மதிப்பு ரூ.2,100 என்பது குறிப்பிடத்தக்கது.