1விரிப்பில் நிமிர்ந்த நிலையில் படுக்கவும்
2 இரண்டு கால்களையும் மடக்க வேண்டும்
3 கால்களுக்கு இடையே, சற்று இடைவெளி இருக்க வேண்டும்
4கைகளை பின்புறமாக கொண்டு சென்று, கழுத்தின் பக்கவாட்டில் சிறிது இடைவெளி விட்டு, விரல்கள் உடலை நோக்கிப் பார்த்தபடி உள்ளங்கை தரையில் படுமாறு வைக்க வேண்டும்
5 உள்ளங்கைகளை அழுத்தியவாறு, நிதானமாக மூச்சை உள்ளிழுத்தபடி மெதுவாக முதுகை உயர்த்தி, பின் தலையை உயர்த்த வேண்டும் (இந்த நிலையில் தலையை கீழே தொங்க விட வேண்டும்.)
அந்த நிலையிலேயே மூன்று தொடக்கம் ஐந்து முறை ஆழமான மூச்சினை சுவாசித்ததன் பின் மூச்சினை வெளியே விட்டுக்கொண்டே மீண்டும் தரையை நோக்கி மெதுவாக முதுகை கொண்டு வந்து கால்களை நீட்டி, கைகளை இடுப்புக்கு அருகில் வைத்து ஐந்து மூச்சுகள் ஒய்வு எடுத்ததின் பின் மீண்டும் செய்யலாம். மூன்று தொடக்கம் ஐந்து முறைகள் இந்த இருக்கையினைச் செய்து கொள்ளலாம்.
உடலைத் தூக்க முடியாதவர்கள் படம் 1ல் காட்டப்பட்டுள்ளவாறு முதுகின் கீழ் தாங்கக் கூடிய தலையணை அல்லது ஏதாவதொரு உபகரணத்தினைப் பாவித்து அதன் மேல் முதுகினை வைத்துக் கொள்ளலாம்.அதுவே போதுமானது, விரும்பியவர்கள் பின்னர் படிப்படியாக படம் 2, 3ல் காட்டப்பட்டுள்ளவாறு முன்னேறி இறுதி நிலையை எட்டலாம்.
இதில் பல்வேறு நிலைகள் பல்வேறு பெயர்களில் இருக்கின்றன.
பலன்கள்:
முதுகுத் தண்டுவடம் பின்பக்கமாக நன்றாக வளைக்கப்படுவதால் முதுகெலும்புகளில் ரத்தம் ஓட்டம் அதிகரிக்கும். எலும்பு இணைப்புகளில் உள்ள தசைநார்கள் வலுவடையும்.
முதுகெலும்பிற்கு இந்த ஆசனமானது முதுகெலும்பை வலுப்படுத்தி எலும்பு தேய்மானத்திலிருந்து பாதுகாக்கிறது.
மார்பு நன்றாக விரிவடைவதால், நுரையீரல்களால் அதிகமான காற்றை உள்ளிழுக்க முடிகிறது.
பின்னந்தலைக்கு நிறைய ரத்த ஓட்டம் கிடைப்பதால், சிறுமூளையும் பெருமூளையும் சுறுசுறுப்பு அடைகின்றன. இதனால், சிந்தனைத் திறன், செயல் ஆற்றல் அதிகரிக்கும்.
நரம்பு மண்டலத்தை சீராக வைக்கிறது சக்கர இருக்கை தொடர்ந்து செய்யப்படும் போது பாராஸிம்பதிக் என்ற நரம்பு மண்டலம் தூண்டப்படுகிறது. இதனால் மனச்சோர்வு, பதட்டம், மன அழுத்தம் இவைகள் குறைக்கப்படுகின்றன.
தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் தைராய்டு சுரப்பி சீராக சுரக்கத் தூண்டப்படும்.
நம் அடி வயிற்று பகுதியில் உள்ள கொழுப்பை குறைத்து தொப்பை வராமல் தடுக்கிறது.
முதுகெலும்பின் வளையும் தன்மையானது அதிகரிக்கப்படுகிறது. ஒரு நாள் முழுவதும் இருந்தபடியே வேலை செய்வதால் ஏற்படும் மோசமான விளைவுகளில் இருந்து நம்மை காத்துக் கொள்ளலாம்.
குறிப்பு:
வலுவிழந்த மணிக்கட்டு உள்ளோர், இந்த ஆசனத்தை தவிர்க்கவும்.
யோகக்கலாநிதி
யோகப்புருஷத்
வி.கௌரிதாசன்.