இரண்டு கால்களையும் ஒன்று சேர்த்து மூச்சை உள்ளிழுத்தவாறு முழங்கால்களை மடித்து உயர்த்தி பின் மூச்சை வெளிவிட்டவாறு தொடைகள் வயிற்றினை அழுத்தியவாறு கொண்டு வரவும். அப்போது
கை விரல்களை ஒன்று சேர்த்து அல்லது தனித் தனியாக படத்தில் காட்டியுள்ளவாறு கால்களைப் பிடித்து வயிற்றில் அழுத்தம் கொடுக்கவும்.
தலையை உயர்த்தி முகவாய் கட்டையை இரண்டு முழங்கால்களுக்கும் இடையில் கொண்டு வந்து வைக்க வேண்டும்.
அந்த நிலையிலேயே மூன்று தொடக்கம் ஐந்து முறை ஆழமான மூச்சினை சுவாசித்ததன் பின் கைகளை அகற்றித் தொடைகளுக்கருகே வைத்து மூச்சினை உள்ளே இழுத்துக் கொண்டே தொடைகளை உயர்த்தி பின்னர் மூச்சினை வெளிவிட்டவாறு முழங்கால்களை நிமிர்த்தி நீட்டி தரையை நோக்கி மெதுவாக தொடக்க நிலைக்கு வந்து ஐந்து மூச்சுகள் ஒய்வு எடுத்ததின் பின் மீண்டும் செய்யலாம்.
அவரவர் உடல்வாகுக்கு ஏற்றாற்போல் ஆரம்பத்தில் ஒரு கால் (படம் 1) மடக்கிச் செய்யலாம். பழகிய பின்பு இரு கால்களையும் முயற்சிக்கலாம்.
பலன்கள் :
முதுகுத்தசைகளை வலுவடையச் செய்கிறது. கீழ் மற்றும் நடு முதுகு வலிக்கு பவன முக்தாசனம் நல்ல பயிற்சி.
வயிற்றுக்கு நல்ல அழுத்தம் கொடுக்கப்படுவதால் வயிற்றில் உள்ள வாயு வெளியேற்றப் படுகிறது. அதனால்தான் இதற்கு பவன(வாயு) முக்த (வெளியேற்றல்) ஆசனம் என்று பெயர்.
நீண்ட நாளாக உள்ள மலச்சிக்கல் பிரச்னைக்கு இந்த இருக்கை ஒரு சிறந்த தீர்வு!
நீரிழிவு பாதிப்பு உள்ளவர்களுக்கு ஏற்ற இருக்கை.
பெண்களுக்கு கருப்பை கோளாறுகள் சரியாகி விடும். பிரசவித்த பெண்களின் அடி வயிற்றில் பெருக்கம் குறையும்.
வாயு கோளாறு நீங்கும்: மனித உடலில் பிராணன், அபாணன், வியாணன், உதானன், சமானன், நாகன், கூர்மன், கிரிகரன், தேவதத்தன், தனஞ்செயன் என பத்து வாயுக்கள் செயல்படுகின்றது. இந்த பத்து வாயுக்களும் அதனதன் சமமான விகிதத்தில் செயல்பட்டால், மனித உடலில் வாயு சம்மந்தமான பிரச்சனைகள் வராது. என்றும் இளமையுடன் வாழலாம். சுறுசுறுப்பாகத் திகழலாம்.
குறிப்பு :
சாதாரண மூச்சில் செய்து பழகவும். ஆஸ்துமா உள்ளவர்கள் மெதுவாக பழகவும். வயிற்றில் அழுத்தம் குறைவாக கொடுக்கவும்.
யோகக்கலாநிதி
யோகப்புருஷத்
வி.கௌரிதாசன்.