விரிப்பில் மல்லாந்து படுக்கவும். கால்களை ஒட்டி வைத்துக்கொண்டு கைகளையும் உடலோடு சேர்த்து வைத்துக்கொள்ளவும். இப்போது மெல்ல மூச்சை உள்ளிழுத்துக்கொண்டு முழங்கால்களை மடிக்காமல் பாதங்களை மட்டும் தரையில் இருந்து ஓரடி உயரத்துக்குத் தூக்கவும். தரையிலிருந்து ஒன்றரை அடிக்கு மேல் தூக்காமல் பார்த்துக்கொள்ளவும். அதிக நேரம் இவ்வாறு இருப்பது கஷ்டமானது. அடி வயிற்றில் நடுக்கம் போல் உணர ஆரம்பிப்போம். தரையில் முதுகுப்பகுதி அழுத்தப்பட்டிருக்க வேண்டும் (முதுகு மேல் நோக்கி வளையக் கூடாது)
அந்த நிலையிலேயே மூன்று தொடக்கம் ஐந்து முறை ஆழமான மூச்சினை சுவாசித்ததன் பின் மூச்சினை வெளிவிட்டவாறு மீண்டும் தரையை நோக்கி மெதுவாக தொடக்க நிலைக்கு வந்து ஐந்து மூச்சுகள் ஒய்வு எடுத்ததின் பின் மீண்டும் செய்யலாம்.
கால்களை இறக்கும்போது வேகமாகக் கீழே விடக் கூடாது. மெதுவாகத்தான் இறக்க வேண்டும் அதே சமயம் தலையை தரையிலிருந்து உயர்த்தக் கூடாது. கைகளை தரையில் அழுத்தி ஊன்றிக் கொண்டு அந்த அழுத்தத்தில் கால்களை மெதுவாக கீழே மெதுவாக மூச்சை விட்டுக்கொண்டு இறக்க வேண்டும்.
மூன்று தொடக்கம் ஐந்து முறைகள் இந்த இருக்கையினைச் செய்து கொள்ளலாம்.
முதலாவது படத்தில் காட்டப்பட்டவாறு இந்த இருக்கையின் அரை நிலை செய்வதானால் வலது, இடது இரு புறமும் மாறி மாறி சம எண்ணிக்கையில் செய்ய வேண்டும்.
பயன்கள் :
அடி வயிற்றில் அதிகம் இருக்கும் தசைகள் குறையும்.
கர்ப்பப்பைக்கு வலுக்கொடுக்கும்.
இளம் மாணாக்கர்களுக்கு இது நல்லதொரு பயிற்சி. நினைவாற்றல் தூண்டப்படும்.
சீரண உறுப்புகள் நன்கு வேலை செய்யும். நல்ல பசி உண்டாகும்.
வாயுத்தொல்லை நீங்கும்.
யோகக்கலாநிதி
யோகப்புருஷத்
வி.கௌரிதாசன்.