திருகோணமலை மூதூர் பிரேதசத்தில் உள்ள 35 மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
ஆயிரத்து ஒன்று துவிச்சக்கர வண்டிகள் 2019 என்ற திட்டத்தின் கீழ் குறித்த துவிச்சக்கர வண்டிகள் கிளிநொச்சி மாவட்ட மக்கள் அமைப்பினரால் மூதுர் பிரதேச மாணவ மாணவிகளுக்கு வழங்கப்பட்டள்ளமை குறிப்பிடத்தக்கது.
இன்று சனிக்கிழமை இடம்பெற்ற இந்த நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட மக்கள் அமைப்பு தலைவர்.. வைத்திய கலாநிதி. சதானந்தன் சத்தியமூர்த்தி யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் மூதூர் பிரதேச சபை உறுப்பினர் ஜெயசீலன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
இதேவேளை, மூதூர் பிரேதசபை உறுப்பினர் ஜெயசீலன் மற்றும் சமூக ஆர்வலர் தம்பி பிரேம் ஆகியோரினால் இந்த நிகழ்வு ஒருங்கிணைக்கபட்டிருந்தது.
சமூக ஆர்வலர் பிரேம் அவர்கள் இது போன்ற சமூகசேவைகளை தொடர்ந்து தம் பகுதி மக்களுக்காக செய்து வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.