முழங்கால் மண்டியிட்டு குதிகால் மேல் உட்காரவும். முன் கைகளைச் சேர்ததுத் தரையில் உள்ளங்கைகளை ஊன்றவும். வயிற்றை இறுக்கி மூச்சை உள் வைத்துத் தொப்புகளை முழங்கை மேல் வைத்து கால்களை மெதுவாகப் பின் நீட்டி முன்சாய்த்து சித்திர நிலைக்கு வரவும். ஆரம்பத்தில் முகத்திற்குக் கீழ் தலையணை கண்டிப்பாக வைக்க வேண்டும். அந்த நிலையிலேயே மூன்று தொடக்கம் ஐந்து முறை ஆழமான மூச்சினை சுவாசித்ததன் பின் மூச்சினை வெளிவிட்டவாறு மீண்டும் தரையை நோக்கி மெதுவாக தொடக்க நிலைக்கு வந்து ஐந்து மூச்சுகள் ஒய்வு எடுத்ததின் பின் மீண்டும் செய்யலாம். மூன்று தொடக்கம் ஐந்து முறைகள் இந்த இருக்கையினைச் செய்து கொள்ளலாம்.
முழுமையான இந்த ஆசனத்தைச் செய்வதற்கு முன்னர் படம் 1, 2, 3களில் உள்ளவாறு இலகு முறைப் பயிற்சிகளை மேற்கொண்டு உடலைச் சம நிலையில் வைத்திருக்கத் தெரிந்து கொண்டதன் பின்னரே படம் 4ல் உள்ளது போன்று தலையையும், கால்களையும் நிலத்திலிருந்து தூக்கி கைகளில் நிற்க முயற்சிக்க வேண்டும்.
இதில் பல்வேறு நிலைகள் பல்வேறு பெயர்களில் இருக்கின்றன.
பலன்கள்
வாத பித்த கபங்களை சமமாய்க் காக்கும்.
விதானம் இரைப்பை, ஈரல், கணையம், சிறுகுடல் இவைகள் கசக்கப்பட்டு நல்ல ரத்த ஓட்டம் ஏற்படும்.
ஜீரண உறுப்புகள் அனைத்தும் நன்கு இயக்கி பசியைத் தூண்டுகிறது.
மலச்சிக்கலைப் போக்குகிறது.
வயிற்றுப் பகுதியில் சேரும் கொழுப்பினைக் கரைக்கிறது.
நீரிழிவு நோய்க்கு முக்கிய ஆசனம்.
யோகக்கலாநிதி
யோகப்புருஷத்
வி.கௌரிதாசன்.