வெளிப்படுத்தாத வருமானங்கள் மற்றும் சொத்துக்களை வெளிப்படுத்துவதற்காகவும் முதலிடுவதற்காகவும் தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கவும், அவ்வாறான முதலீட்டாளர்களின் வரி, அவர்களுக்கான தண்டப்பணம் அல்லது அவர்களது வட்டி செலுத்தும் பொறுப்புக்கள் மற்றும் அவர்கள் மீது வழக்குத் தொடர்வதிலிருந்த அவர்களை விடுவித்து – 1% ‘சுய வெளிப்படுத்தலுக்கான வரி’ மாத்திரம், சட்ட ரீதியான ஏற்பாடுகளோடு விதிப்பதற்கு, 2021 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ளது.
அதற்குத் தேவையான ஏற்பாடுகளைத் தயார் செய்யுவதற்கு ஏற்ப, 2021 நிதிச் சட்டமூலத்தைத் தயாரிப்பதற்காக – 2021 பெப்ரவரி மாதம் 22 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பின்னர் நாடாளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்கும்,
நிதி அமைச்சராக கௌரவ பிரதமர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.