ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரும், முன்னாள் தலைவருமான குமார் சங்ககார நியமிக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பிலான விடயங்கள் பல மட்டங்களிலிருந்தும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த ஆலோசனைக்கு ஐக்கிய தேசிய கட்சியின் பல உறுப்பினர்கள் ஆதரவு வெளியிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, ஐ.தே.கவின் பிரதித் தலைவர் சுஜித் பிரேமதாசவும் இந்த தீர்மானத்திற்கு இணக்கம் வெளியிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உத்தியோகபற்றற்ற தகவல் இதனைத் தெரிவித்துள்ளமை கவனிக்கத்தக்கது.