4 வருட கடூழிய சிறைத்தண்டனையை அனுபவித்து வருகின்ற முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்ஜன் ராமநாயக்கவுக்கு சிறைக்குள்ளேயே தொலைக்காட்சி வசதி செய்துகொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கள ஊடகமொன்று இந்த தகவலை இன்று வெளியிட்டுள்ளது.
ரஞ்ஜன் ராமநாயக்க தற்போது அம்பாந்தோட்டை – அங்குனகொல பெலஸ்ஸ சிறையில் உள்ளார்.
சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த இதனைத் தெரிவித்துள்ளார்.
இதுதவிர, மின்விசிறி ஒன்றும் அவருக்கு அளிக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.