முன்னுரை:
கி.மு 3067 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு உன்னதமான நிகழ்ச்சியை தெரிந்துக்கொள்வதன் மூலம் தர்மத்தின் வழி நடப்பது எவ்வாறு என்பதையும் அதன் உன்னதம் எத்தகையது என்பதையும் அதனால் நாம் எத்தகைய நல்ல உன்னதமான கதியை அடைவோம் என்பது பற்றியும் அறியலாம்.
அந்த நிகழ்ச்சி வேறொன்றும் இல்லை அது தான் மகாபாரதம் என்ற புனித யுத்தம் (தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் இடையே நடைபெற்றது ). இது குறிப்பாக இரண்டு வகை பட்ட மனித கூட்டங்களுக்கு இடையேயான யுத்தத்தை பற்றி விளக்குகிறது. ஒரு பக்கம் மன்னர் பாண்டு வின் மகன்கள் அதாவது பாண்டவர்கள் மற்றொரு பக்கம் திர்திராஷ்டிரர் மகன்கள் நூறு பேர் அதாவது கௌரவர்கள் இருக்கிறார்கள். பாண்டவர்களோ தர்மத்தை நிலைநாட்ட முயலுகின்றனர். கௌரவர்களோ அதர்மமாக வாழ நினைக்கிறார்கள். இந்த தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் இடையே யுத்தம் மூண்டது. பாண்டவர்களும் கௌரவர்களும் கேட்டு கொண்டதின் பேரில் ஸ்ரீ கிருஷ்ணர் பாண்டவர்கள் பக்கமும் கிருஷ்ணரின் ராணுவ படைகள் கௌரவர்கள் பக்கமும் சேர்ந்தனர்.
அதர்ம கௌரவர்கள் தர்மத்தின் வழி செல்ல மறுத்ததால் கி.மு 3067 ஆண்டு நவம்பர் 22 ம் தேதி இரண்டு அணிகளுக்கும் இடையே யுத்தம் மூண்டது.
யுத்தத்திற்கு தயாரான பாண்டவரில் ஒருவரான அர்ஜுனனுக்கு தேரோட்டியாக ஸ்ரீ கிருஷ்ணர் வந்தார். யுத்தத்தின் முதல் நாள் இரண்டு அணிகளும் குருக்ஷேத்ரத்தில் (தர்மபூமியில் ) திரண்டன.
யுத்தகளத்தின் நடுவே சென்று இரண்டு அணிகளையும் கண்ட அர்ஜுனன், தனக்கு எதிரே எதிரணியில் நிற்கும் அனைவரையும் கண்டான். அதில் தனது பாட்டனார் பீஷ்மர், அண்ணன் துரியோதனன், துச்சாதனன் மற்றும் மாமா, நண்பர்களையும் கண்டான்.
அரசாட்சி பெறுவதற்காக நான் இவர்களை கொல்ல வேண்டுமா ? என்று நினைத்து பதறினான் மனம் தடுமாறினான் கண் கலங்கினான். அர்ஜுனனின் இந்த மன தடுமாற்றதினாலேயே உன்னதமான உண்மையை அதாவது பகவத்கீதையை ஸ்ரீ கிருஷ்ணரின் மூலம் அர்ஜுனன் தெரிந்துகொண்டான். அதை எழுதி வைத்த வியாச முனிவர் மூலம் நாம் இன்றும் அதை படித்து தெரிந்து கொள்ளும் வாய்ப்பை பெற்று இருக்கிறோம் .
ஸ்ரீ கிருஷ்ணர் கூறிய சமஸ்க்ருத வார்த்தை மொத்தம் 700 ஆகும். ஒவ்வொரு அத்தியாயமும் ஒரு யோகத்தினைக் குறிக்கும். யோகம் என்பதற்கு அடைதல் எனப் பொருள். இதில் கடவுளை அடையும் 18 முறைகள் சொல்லப்பட்டுள்ளது.
இதற்கு ஸ்ரீசங்கரர், ஸ்ரீ ராமனுஜர், ஸ்ரீ மத்வர் போன்ற சமயாச்சார்யார்கள் வியாக்கியாணம் எழுதியுள்ளனர்.
அவைகளை வரும் வாரங்களில் விரிவாக காண்போம்.