வௌவால்களை பாதுகாக்கும் புதிய முயற்சிகளை இங்கிலாந்து எடுத்து வருகிறது.
வோர்செஸ்டர்ஸ்ரையர் நகராட்சி மன்றம் வௌவால்களுக்காக வீதி விளக்குகளை வெள்ளை நிறத்திலிருந்து சிவப்பு நிறத்திற்கு மாற்றியுள்ளது.
வெளவால்கள், வழக்கமான வெள்ளை நிற வீதி விளக்குகளைக் கடந்து செல்வதில்லை என ஆய்வின் ஊடாக அண்மையில் கண்டறிப்பட்டிருந்தமையை தொடர்ந்து, வீதிகளில் சிவப்பு விளக்குகளை பொருத்துமாறு பரிந்துரை செய்யப்பட்டிருந்ததற்கு அமைய குறித்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதன்காரணமாக வெளவால்கள் உணவு, தண்ணீர் ஆகியவற்றை எளிதாகத் தேடிச் செல்ல முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதேவேளை, 60 மீட்டர் தூரத்திற்கு சிவப்பு LED விளக்குகள் A4440 வீதிகளில் பொருத்தப்பட்டுள்ளதுடன், சிவப்பு வீதி விளக்குகளால் பாதசாரிகளுக்கும் ஓட்டுநர்களுக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படாது எனவும் Worcestershire நகராட்சி மன்றம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.