காஷ்மீரில் சுட்டு கொலை செய்யப்பட்ட ஏழு பேரின் உடல்களையும் எடுத்துச் செல்லுமாறு இந்திய இராணுவம் பாகிஸ்தானுக்கு அனுமதியளித்துள்ளது.
வெள்ளைக்கொடியுடன் வருகைதந்து உடல்களை எடுத்துச் செல்லுமாறு இந்திய இராணுவம் அழைப்பு விடுத்துள்ளது.
ஆனால் இந்திய இராணுவத்தின் குறித்த அறிவிப்பிற்கு பாகிஸ்தான் இராணுவ தரப்பில் இருந்து எந்த பதிலும் அளிக்கப்படவில்லை என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பாகிஸ்தான் எல்லை நடவடிக்கை குழுவுடன் இணைந்து ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பை சேர்ந்த 15 பேர் காஷ்மீருக்குள் ஊடுருவ முயன்றுள்ளதாக இந்திய உளவுத்துறைக்கு தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.
இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் இந்திய இராணுவத்தினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச்சூடு நடைபெற்றதுடன், இதில் பயங்கரவாதிகள் எழுவர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.