அமெரிக்காவின் பதில் உதவி இராஜாங்கச் செயலாளர் அலிஸ் வெல்ஸிற்கும், இலங்கை வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பனவிற்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
வெளிவிவகார அமைச்சில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் பல்வேறுபட்ட விடயங்கள் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்க பதில் உதவி இரஜாங்க செயலாளர் இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ளார்.
குறிப்பாக இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர மற்றும் வர்த்த உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பில், இந்தச் சந்திப்பின் போது முக்கிய கவனம் செலுத்தப்பட்டதாக, வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறெனினும், இந்தச் சந்திப்பின் போது, இலங்கையில் சர்ச்சைகளை தோற்றுவித்துள்ள, சோபா உடன்படிக்கை குறித்து கலந்துரையாடப்பட்டதா என்பது தொடர்பில் அமைச்சு எவ்வித தகவல்களையும் வெளியிடவில்லை. மேலும், இலங்கையில் அமெரிக்காவின் முதலீடுகள் மற்றும் வேலைவாய்ப்பை அதிகரிப்பது குறித்து, இந்த சந்திப்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.