எதிர்வரும் உலககிண்ண கால்பந்து தொடருக்கான உத்தியோகபூர்வ சின்னம் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த உத்தியோகபூர்வ சின்னம் டோஹா டவரில் மின் விளக்குகளால் அமைக்கப்பட்ட லேசர் கதிர்களினால் ஒளிரவிடப்பட்டுள்ளதுடன் மட்டுமில்லாமல் கட்டாரின் முக்கிய நகரங்களில் உள்ள பிரபல கட்டிடங்களின் வெளிப்பறத்திலும் லேசர் கதிர்களால் உத்தியோகபூர்வ சின்னம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் உலகக்கிண்ண கால்பந்து தொடர், எதிர்வரும் 2022ஆம் ஆண்டு கட்டாரில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில், இத்தொடரை நடத்துவதற்கான கால்பந்து விளையாட்டு அரங்குகளின் நிர்மாணப் பணிகளை, கட்டார் அரசாங்கம் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றது.
எட்டு அரங்குகளுடன் 32 அணிகளுக்கான பயிற்சி அரங்குகளும் அடுத்த வருடத்துக்குள் பூர்த்தி செய்யப்பட்டுவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் உலகக்கிண்ண கால்பந்து தொடருக்கான தயார்படுத்தல்களை போட்டி அமைப்பாளர்கள் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.