மூன்று வருடமாக தொடர்ச்சியாக மர நடுகையை நடாத்தி சுற்றுச் சூழலில் ஓர் மாற்றத்தை ஏற்படுத்தி இயற்கையின் சமநிலையைப் பேணுவதில் அக்கறையுடன் செயற்படும் பியூச்சர் மைண்ட் Future Mind அமைப்பினரால் துளிர் எனும் மர நடுகை செயற்றிட்டம் பல இடங்களில் நடைபெற்று வருகின்றது.
அந்த வகையில் 2019 ஆண்டிற்கான மர நடுகை செயற்றிட்டம் பல இடங்களில் ஆரம்பித்து வைக்கப்பட்டும் , 2016 ஆம் ஆண்டளவில் வைக்கப்பட்ட மரக்கன்றை பராமரித்தவர்களுக்கான கௌரவம் எனும் சான்றிதழும் தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகின்றது.
இங்கு கருத்து தெரிவித்த பியூச்சர் மைண்ட் (Future Mind) அமைப்பின் இயக்குனர் ம.ரஞ்ஜன்
இச் செயற்றிட்டமானது கடந்த வருடங்களை விட சற்று சிறப்பாக செய்ய வேண்டும் எனும் நோக்கிலும் இச் செயற்றிட்டம் எதிர்கால சந்ததியினருக்கு ஓர் நன்மையைத் தரக் கூடியதாகவும் இருக்க வேண்டும் என்பதற்காகவும் பல அணுசரனைகளான ஒட்டாறா பவுண்டேசன் (Otara Foundation ), HNB Assurance மற்றும் , துரு ( Thuru ) அமைப்புடனும் இணைந்து பல்லாயிரக் கணக்கான மர நடுகை செயற்றிட்டத்தினை முன்னெடுக்கின்றோம் என்றும்
இம் மாத இறுதியில் இச் செயற்திட்டம் மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ள வாழைச்சேனையில் இரு இடங்களில் இயற்கையை நேசிக்கும் ஆர்வலர்களான துரு ( Thuru ) அமைப்புடன் இணைந்தும் மற்றும் கோறளைப்பற்று பிரதேச சபையுடன் இணைந்தும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதுடன்,
மட்டக்களப்பு ,திருகோணமலை கல்முனை ஆகிய பிரதேசங்களில் ஒரே நாளில் பல்லாயிரக்கணக்கான மரக்கன்றுகளை நாட்ட திட்டமிட்டுள்ளோம் என்றும். இச் செயற்றிட்டமானது இவ்வாண்டின் இறுதிக்குள் நடைபெறும் என்றும்
அந்த வகையில் இம் மரக்கன்றுகளை தொடர்ச்சியாக பராமரித்து வளர்ப்பவர்களுக்கு கௌரவம் எனும் சான்றிதழ் ஒன்றையும் வழங்கிக் கொண்டிருக்கின்றோம்என்றும் பியூச்சர் மைண்ட் (Future Mind) அமைப்பின் இயக்குனர் ம.ரஞ்ஜன் கருத்துத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.