வவுனியா கனகராயன்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முதிரங்குளம் குளப்பகுதியிலிருந்து ஆர்பீஜி செல் மற்றும் கைக்குண்டு ஒன்று நேற்று (07) மாலை மீட்கப்பட்டுள்ளது.
இச் சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, குறித்த பகுதியில் உள்ள குளத்திற்கு அருகாமையில் வெடிபொருள்கள் இருப்பது தொடர்பாக இராணுவத்திற்கு தகவல் வழங்கப்பட்டிருந்தது.
சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் மற்றும் இராணுவத்தினர் குறித்த பகுதியை சோதனையிட்ட நிலையில் ஆர்பீஜி செல் ஒன்றினையும், கைக்குண்டு ஒன்றினையும் மீட்டுள்ளனர்.
நீதிமன்றின் அனுமதியுடன் குறித்த வெடிபொருட்கள் இன்று செயலிழக்க செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
