புத்தளத்தில் வர்த்தகர் ஒருவரின் வீட்டின் மீது பெற்றோல் குண்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதுடன், மலர் மாலைகளும் வைக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் புத்தளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதிகாலை 1.50 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த சிலர் மலர் மாலையை வாசலின் முன்னால் தொங்கவிட்ட பின்னர் பெற்றோல் குண்டுத்தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றுள்னர்.
வீட்டில் வர்த்தகர் மற்றும் அவரது மனைவி பிள்ளைகள் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த போதிலும் அவர்களுக்கு எவ்வித ஆபத்தும் ஏற்படவில்லை என விசாரணை நடத்தும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வீட்டின் பொருட்கள் சிலவற்றிற்கு மாத்திரம் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.