நாட்டு மக்களின் பொருளதார நிலைமையை உயர்த்துவதற்காக தமது அரசாங்கத்தின் கீழ் 10 வேலைத்திட்டங்கள் முன்னனெடுக்கப்படுமென பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
தற்போது காணப்படும் வேலையில்லாத பிரச்சினையை இல்லாது செய்ய உரிய வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன் போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், வீடில்லா பிரச்சினைக்குஉரிய நடைமுறை மேற்கொள்ளப்படுமெனவும், மக்களின் வருமானத்தைஅதிகரிப்பதற்கு நீண்டகால வேலைத்திட்டம் அவசியமெனவும் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.