தரைவிரிப்பின் மீது குப்புறப்படுத்தபடி கால்கள் இரண்டையும் இருகைகளாலும் பிடித்துக்கொண்டு மூச்சை உள்ளே இழுத்தபடி கால் தொடைகளையும், நெஞ்சுப்பகுதியையும் பின்புறமாக வில்லைப் போன்று வளைத்து உயர்த்தி வயிற்றுப் பகுதி மட்டும் விரிப்பில் தொட்டிருக்குமாறு நிற்க வேண்டும். அந்த நிலையிலேயே மூன்று தொடக்கம் ஐந்து முறை ஆழமான மூச்சினை சுவாசித்ததன் பின் மூச்சினை வெளிவிட்டவாறு மீண்டும் தரையை நோக்கி மெதுவாக தொடக்க நிலைக்கு வந்து ஐந்து மூச்சுகள் ஒய்வு எடுத்ததின் பின் மீண்டும் செய்யலாம். மூன்று தொடக்கம் ஐந்து முறைகள் இந்த இருக்கையினைச் செய்து கொள்ளலாம்.
முதலாவது படத்தில் காட்டப்பட்டவாறு இந்த இருக்கையின் அரை நிலை செய்வதானால் வலது, இடது இரு புறமும் மாறி மாறி செய்ய வேண்டும்.
இதில் பல்வேறு நிலைகள் பல்வேறு பெயர்களில் இருக்கின்றன.
வில் இருக்கை பலன்கள்
இந்த உருநிலையைச் செய்வதால் இரைப்பை, அடிவயிறு கோளாறுகளை நீக்குகிறது. மலச்சிக்கலை போக்கும்.
ஜீரண சக்தி அதிகரிக்கும். அட்ரீனல், பிட்யூடரி, தைராய்டு மற்றும் பாலியல் சுரப்பிகளை தூண்டும்.
அதிக உடல் பருமன் உடையவர்கள் செய்ய வேண்டிய ஆசனம். வயிற்றுப் பகுதிக்கு இரத்த ஓட்டம் அதிகமாகி வயிற்று ஊளைச்சதை குறையும்.
நாளமில்லா சுரப்பிகள் ஊக்குவிக்கப்படுவதால், மாதவிடாய், கர்ப்பக் கோளாறுகள், வயிற்றுக்கோளாறுகள் நீங்கும்.பெண்களுக்கு உகந்தது.
கூன் முதுகு, முதுகு வலி, இடுப்பு வலி நீங்கும்.
ஆஸ்துமா, மார்புச்சளி, ஈசினோபீலியா, சிறுநீரக நோய்கள், அஜீரணம், வயிற்று வலி நோய்களுக்கு பலன் தரும்.
குறிப்பு:
உயர் ரத்த அழுத்தம், அடிவயிறு கோளாறுகள், இடுப்பு வலி முதுகுவலி உள்ளவர்கள் இந்த உருநிலையைத் தவிர்க்கவும்.