வவுனியாவில் கடுங்காற்றினால் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்ந்தும் வேறு இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியாவில் கடந்த சில நாட்களாக நிலவி வரும் கடும் காற்று மற்றும் மழையுடன் கூடிய காலநிலையினால் வவுனியா செட்டிகுளம், வவுனியா வடக்கு, நெடுங்கேணி மற்றும் வவுனியா தெற்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட ஈரப்பெரியகுளம் ஆகிய இடங்களில் வசிக்கும் மக்களே அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக அந்த பகுதிகளில் நேற்றிலிருந்து கடும் காற்றுடன் கூடிய காலநிலை நிலவுகின்றது.
இதன் காரணமாக 8 வீடுகள் சேதமடைந்துள்ளதுடன், அங்கு வாழ்ந்த மக்கள் இடம்பெயர்ந்து அருகில் உள்ள வீடுகளிலும் பொதுநோக்கு மண்டங்களிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அத்தோடு, நேற்று இரவு பெய்த காற்றுடன் கூடிய கடும் மழை காரணமாக வீடுகளில் இருந்த பொருட்களும் சேதமாகியுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.