நாடாளுமன்றத்தில் வழுக்கி விழுந்தவர்களின் எண்ணிக்கை தொடர்பான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
இலங்கை நாடாளுமன்றத்தின் தரையை சுத்தப்படுத்தும்போது வழுக்கல் தன்மை கொண்ட திரவியம் பயன்படுத்தப்பட்டது.
இந்த சந்தர்ப்பத்தில் அந்த வழியாக சென்று கால் வழுக்கி விழுந்தவர்களின் எண்ணிக்கை 24ஆக மதிப்பிடப்பட்டுள்ளது.
இவர்களில் 06 நாடாளுமன்ற உறுப்பினர்களும், 14 ஊழியர்களும், 04 பார்வையாளர்களும் வழுக்கி விழுந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிழையான திரவியமொன்று தரை சுத்தப்படுத்தும் பணிகளுக்காக பயன்படுத்தியிருப்பது தற்போது தெரியவந்துள்ளது.