இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அவுரங்கபாத் நோக்கி சென்ற அரசு பேருந்தொன்றின் மீது கண்டெய்னர் லொறி ஒன்று மோதியதாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளதுடன், காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.