கத்தி படத்தின் தெலுங்கு ரீமேக்கை தனது 150 ஆவது படமாக எடுத்து நடித்தார் தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி. இதனால் இந்த படத்திற்கு கைதி எண்-150 என பெயரிட்டனர் படக்குழுவினர்.
இதைத் தொடர்ந்து, ஆந்திராவில் வாழ்ந்த சுதந்திரப் போராட்ட வீரர் உய்யாலவாடா நரசிம்மா ரெட்டியின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடித்து முடித்துள்ளார், சிரஞ்சீவி. `சைரா நரசிம்மா ரெட்டி’ எனப் பெயரிட்டுள்ள இந்தப் படத்தை அவரது மகனும் நடிகருமான ராம் சரண் தயாரித்துள்ளார்.
`துருவா’, `ரேஸுகுர்ரம்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய சுரேந்தர் ரெட்டி இந்தப்படத்தை இயக்கியுள்ளார்.
இதில் சிரஞ்சீவியுடன் அமிதாப் பச்சன், நயன்தாரா, தமன்னா, விஜய் சேதுபதி ஆகியோர் நடித்துள்ளனர்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி எனப் பல மொழிகளில் படம் வெளியாகிறநிலையில், இதன் தமிழ் வெர்ஷனில் சிரஞ்சீவிக்கு அரவிந்தசாமி பிண்ணனி குரல் கொடுத்துள்ளார்.
இரண்டு வருடங்கள் கழித்து, வெளியாகும் சிரஞ்சீவி படம் என்பதால் இதைக் கொண்டாட மெகா ஸ்டார் ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கின்ற நிலையில், இந்தப் படத்தை முடித்துவிட்டு, கொரடாலா சிவா இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் சிரஞ்சீவி. அதில் அவருக்கு ஜோடியாக இலியானா நடிக்க அதிக வாய்ப்பிருப்பதாகத் தகவல்கள் கசிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.