ராஜபக்ஷர்கள் மீது கொண்ட நம்பிக்கையின் காரணமாகவே மக்கள் பொதுஜன பெரமுனவிற்கு ஆணையை வழங்கியுள்ளார்கள் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
மொனராகலை- மெதகம பிரதேசத்தில் இடம் பெற்ற பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கூட்டத்திலேயே அவர் இதனைக் கூறினார்.
பொதுத்தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆசனங்களை கைப்பற்றுவது எமது பிரதான இலக்காகும்.
மக்களால் வெறுக்கப்பட்ட அரசியல்வாதிகள் தேசிய பட்டியல் ஊடாக இம்முறை பாராளுமன்றத்திற்கு செல்ல முயற்சிக்கிறார்கள். இத்தன்மையினை இரண்டு பிரதான எதிர்க்கட்சிகளிலும் காணலாம். இக்கட்சிகள் தொடர்பில் மக்கள் கவனம் செலுத்த வேண்டும்.
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியில் இருந்து வெளியேறிய பிறகு மொட்டு சின்னத்தில் பொதுஜன பெரமுனவை உருவாக்கினோம்.
புதிய கட்சியுடன் ராஜபக்ஷர்களின் அரசியல் முடிவடையும் என அப்போதைய ஆளும் தரப்பினர்கள் குறிப்பிட்டார்கள். ஆனால் மக்கள் எங்களை கைவிடவில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார்.