யெமனில் அல் கொய்தா ஆயுததாரிகள் நடத்திய துப்பாக்கி தாக்குதலில் 19 இராணுவத்தினர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நேற்று வெள்ளிக்கிழமை இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
யெமனில்அந்நாட்டு அரசாங்கத்திற்கு எதிராக ஹுத்தி இன மக்கள் ஆயுத போராட்டத்தை ஈரான் அரசாங்கத்தின் ஆதரவுடன் முன்னெடுத்து வருகின்றனர்.
கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக இடம்பெற்று வரும் இந்த ஆயத போராட்டத்தினால் மக்களின் இயல்பு நிலை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதுடன், பஞ்ச நிலையும் காணப்படுகிறது.
இதேவேளை, யெமன் அரசாங்கத்திற்கு ஆதரவாக சவூதி அரேபிய தலைமையிலான கூட்டு படையும் ஹுத்தி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக தொடர் தாக்குதலை நடத்திவருகிறது.
இந்த நிலையில், யெமனில், அண்மைக்காலமாக அங்கு மீண்டும் தலையெடுத்து வரும் அல்-கொய்தா பயங்கரவாதிகள் அரசப்படையினர் மீது அவ்வப்போது திடீரென அதிரடி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இதற்கேற்ப நேற்று வெள்ளிக்கிழமை அல கொய்தா ஆயததாரிகள் அரச படைகளுக்கு எதிராக துப்பாக்கி தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
இந்த தாக்குதலில் 19 இராணுவத்தினர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளதாகவும், காயமடைந்தவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளமையினால் உயிரிழப்புக்களின் எண்ணிக்கை அதிரிக்கலாமெனவும் அதிகாரிகள் அச்சம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.