யாழ்.ஈச்சமோட்டை பகுதியில் உள்ள வாசிகசாலை ஒன்றின் மீது இனந்தொியாத நபா்கள் கழிவு ஓயில் வீசியுள்ளதோடு, வாசிகசாலையின் கதவுகள், ஜன்னல் போன்றவற்றை அடித்து நொருக்கியுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
குறித்த பகுதியில் உள்ள கழிவு வாய்க்கால் ஒன்றிணை மூடி அயல் கிராமத்தவா்கள் கலையரங்கு ஒன்றிணை கட்டுவதற்கு முயற்சித நிலையில், தாக்குதலுக்குள்ளான வாசிகசாலை நிா்வாகம் அதனை தடுத்துள்ளனர்.
இதன் காரணமாக அயல் கிராமத்தவா்களிற்கும் வாசிகசாலை நிர்வாகத்திற்கும் இடையில் தா்க்கம் உருவாகியிருந்தது.
இதனையடுத்து குறித்த விடயம் பொறுப்புவாய்ந்த அதிகாாிகளின் கவனத்திற்கு கொண்டு செல் லப்பட்டபோதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இந்நிலையில் வாசிகசாலை மீது நேற்று இரவு இனந்தொியாத நபா்கள் தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், சம்பவம் தொடா்பான விசாரணைகளை பொலிஸாா் மேற்கொண்டுள்ளனா்.