ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக நிதியமைச்சர் மங்கள சமரவீர நடத்திய இரவு விருந்தில் பேசப்பட்ட விடயங்கள் தற்போது வெளியாகியிருக்கின்றன.
இந்த இராப்போசனம் அமைச்சர் மங்கள சமரவீரவின் இல்லத்தில் நேற்று புதன்கிழமை இரவு நடைபெற்றிருந்தது..
ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கனவில் உள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரான அமைச்சர் சஜித் பிரேமதாஸ இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்தார்.
அக்கட்சியின் கலாநிதி ஹர்ஷ டி சில்வா உள்ளிட்ட பலரும் இந்த இராப்போசனத்தில் பங்கெடுத்திருந்தனர்.
இதன்போது கருத்து வெளியிட்டுள்ள கலாநிதி ஹர்ஷ டி சில்வா, அமைச்சர் சஜித் பிரேதமாஸவை விடுத்து ஐக்கிய தேசிய முன்னணி வேறு எந்த வேட்பாளரை நியமித்தாலும் தோல்வியைவே தழுவும் என்று குறிப்பிட்டார்.
இந்த இராபோசனத்தில் 32 உறுப்பினர்கள் கலந்துகொண்டிருந்ததுடன், இந்தியா மற்றும் இந்தியப் பிரதமர் மோடியின் ஆதரவு எப்போதும் தனக்கு இருப்பதாக சஜித் பிரேமதாஸ இதன்போது நம்பிக்கை வெளியிட்டார்