எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மைத்திரியின் ஆதரவுடன் பொது வேட்பாளராக சஜித் பிரமேதாசவை களமிறக்க ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மகிந்த எதிர்ப்பு அணி முஸ்தீபில் இறங்கியுள்ளதாக தலைநகரிலிருந்து வெளிவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளராக கரு களமிறக்கப்படும் சாத்தியம் காணப்படுவதால், ஐக்கிய தேசிய கட்சியின் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவான அணி எதிர்ப்பு நடவடடிக்கைகளில் இறங்கியுள்ளது.
இந்த நிலையில், நாளைய தினம் கூட்டணி ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டால் எதிர்வரும் நாட்களில் காலிமுகத்திடலுக்கு மக்களை திரட்டி சஜித் பிரேமதாஸவை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்க அவரின் ஆதரவாளர்கள் அணி முன்னெடுப்புக்களை மேற்கொண்டுள்ளது.
இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக கோட்டபாய ராஜபக்ஷ களமிறங்கினால் ஸ்ரீலங்கா சுதந்திரகட்சியின் மைத்திரிபால சிறிசேனவின் ஆதரவான அணி சஜித்தை ஆதரிக்கும் முடிவை எடுக்க பேச்சுக்களை ஆரம்பித்துள்ளதாக கொழும்பு அரசியல் உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.