மெக்ஸிக்கோவில் ஒரு தொகை தங்க நாணயங்கள் திருடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாணயங்களை அச்சிடும் நிறுவனத்தின் தலைமையகத்திலிருந்த நாணயங்களே இவ்வாறு கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவி்க்கப்பட்டுள்ளது.
ஆயுததாரிகள் இருவரால் 2 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிக தங்க நாணயங்கள் இவ்வாறு கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.
ஸ்பெயினிலிருந்து மெக்ஸிக்கோ சுதந்திரமடைந்து 100 வருட பூர்த்தியை முன்னிட்டு அச்சிடப்பட்ட நாணயங்களே இவ்வாறு கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில் இதுகுறித்த விசாரணைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் மெக்ஸிக்கோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.