விடுதலை புலிகள் அமைப்பிற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையிலான இறுதியுத்தம் இடம்பெற்ற முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற வெடிப்புச்சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
குறித்த பகுதியில் நேற்று இரவு ஏற்பட்ட பாரிய வெடிப்புச் சம்பவத்தினை தொடர்ந்து முள்ளிவாய்க்கால் மக்கள் பீதியுடன் பதற்றமடைந்துள்ளனர்.
இந்த நிலையில், இந்த பிரதேசத்தில் இராணுவத்தின் 681ஆவது படையணி அமைந்துள்ளபோதிலும் படைத்தரப்பில் எந்தவொரு பயிற்சியோ இடம்பெறவில்லை என்று தெளிவுகூறப்பட்டுள்ளது.
எனினும் முள்ளிவாய்க்கால் பகுதியிலுள்ள காடு ஒன்றில் இவ்வாறு வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றதாகவும், இனந்தெரியாத நபர் ஒருவர் காட்டில் தீ மூட்டியபோது மண்ணில் புதைந்திருந்த வெடிபொருள் ஏதாவது வெடித்துச் சிதறியிருக்கலாம் என்றும் பொலிஸ் தரப்பில் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.