முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட அம்பகாமம் கிராம அலுவலர் பிரிவில் அம்பகாமம் மம்மில் பிள்ளையார் ஆலயத்துக்கு அருகாமையில் நேற்று மாலை டிப்பர் வாகனத்தில் மணல் ஏற்றிக் கொண்டிருந்த நால்வர் மீது இலங்கை இராணுவத்தினர் துப்பாக்கிப்பிரயோகத்தை மேற்கொண்டதுடன் மூர்க்கத்தனமான தாக்குதலையும் நடத்தியுள்ளனர்
குறித்த பகுதியில் மணல் ஏற்றியவர்கள் மீது அங்கு சென்ற 4 இராணுவத்தினர் தாக்க முற்பட்ட வேளையில் அங்கு மணல் ஏற்றிய மூன்று பேர் தப்பியோட முயற்சித்துள்ளனர் இந்நிலையில் வாகன சாரதியை நோக்கி துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டனர். தெய்வாதீனமாக துப்பாக்கி ரவைகள் அவர்மீது படவில்லை ஏனையவர்கள் தப்பிச் செல்ல வாகன சாரதியை சிறைப் பிடித்த ராணுவத்தினர் அவருடைய முகத்தில் கடுமையாகத் தாக்கியதோடு முதுகுப் பக்கத்தில் ராணுவ துப்பாக்கியால் அடித்து காயப்படுத்தியுள்ளனர்.
இந்த சம்பவம் தமிழர் தரப்பின் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள நிலையில் பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துவருகின்றனர்.