பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் டிக்கெட் டு பினாலே டாஸ்குகள் நடைபெற்று வருகிறது. இதில் வெற்றி பெற்று நேரடியாக இறுதி போட்டிக்கு செல்ல ஹவுஸ் 7 பேரும் தீயாக விளையாடி வருகின்றனர். புதன் கிழமை நிலவரப்படி 6 டாஸ்குகள் நிறைவடைந்திருந்த நிலையில் அதில் முதலிடத்தில் இருந்தார். இதன் தொடர்ச்சியாக நேற்று ஏழாவது டாஸ்க் நடைபெற்றது. அதில் ஒவ்வொரு போட்டியாளரும் ஒருவருடன் ஒருவராக போட்டியிட வேண்டும் என கூறப்பட்டது. அதில் போட்டியாளர்களுக்கு பந்தை உருண்டுகொண்டே எடுத்து இடம்மாற்றி ஒரு வளையத்திற்குள் வைக்க வேண்டும் என டாஸ்க் வழங்கப்பட்டது.
வளையத்திற்கு வெளியே பந்துகள் சென்றால் மீண்டும் வைக்க வேண்டும். அதன்படி ஷிவானி மற்றும் ரம்யா தோல்வி அடைந்தனர். அதில் ரம்யா அதிக நேரம் எடுத்துக்கொண்டதால் அவருக்கு கடைசி இடம் கொடுக்கப்பட்டது. ஷிவானிக்கு 6வது இடம் கொடுக்கப்பட்டது. இதனிடையே பாலாஜிக்கு, கோழி பண்ணை டாஸ்கில் அதிக பணம் சேகரித்து வைத்திருந்ததால் ஒரு “சூப்பர் பவர்” கொடுக்கப்படும் என்றும் அது பின்னர் அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டிருந்தது.
அதன்படி இந்த டாஸ்கில் பாலாஜி, தன்னுடன் போட்டியிடும் நபரை அவரே தெரிந்தெக்கலாம் என கூறப்பட்டது.
இதையடுத்து பாலாஜி, கேபியை தேர்வு செய்தார். கேபி எளிதாக தோற்றுவிடுவார் என்ற எண்ணத்தில் அவரை பாலாஜி தேர்வு செய்த நிலையில், கேபி அதிரடியாக விளையாடி ஜெயித்து விட்டார். இதனை தொடர்ந்து இறுதிகட்ட போட்டி சோம் மற்றும் கேபி இடையே நடைபெற்றது. இதில் இருவரும் சரியாக ஒரே நேரத்தில் முடித்தால் யார் வெற்றியாளர் என்பது தெரியாமல் போனது. அதன் பின் மூன்றாவது அம்பையர் மூலம் ரிசல்ட் பார்க்கப்பட்து, எனினும் இருவரும் ஒரே நேரத்தில் முடித்தால் இருவருக்கும் மேலும் ஒரு சுற்று வைக்கப்பட்டு அதில் சோம் வெற்றி பெற்று முதலிடத்தை பிடித்தார். 7 டாஸ்குகள் முடிவில் போட்டியாளர்களின் மதிப்பெண்கள் விவரம் – ரியோ – 32, சோம் – 32, பாலா – 30, ஷிவானி – 28, ரம்யா – 28, ஆரி – 24, கேபி – 22 ஆகும்.
இதனை தொடந்து 8வது டாஸ்கில் போட்டியாளர்களுக்கு டைட்டில் கொடுக்கும் டாஸ்க் வழங்கப்பட்டது. அதில் போட்டியாளர்களின் உருவங்கள் இருக்கும் கட் அவுட் வைக்கப்பட்டிருக்கும். வாசகங்கள் அடங்கிய டைட்டிலை ஒவ்வொருவரை முன்னின்றி யாருக்கு பொருந்தும் என கூற வேண்டும். பின்னர் யாரை அதிகமானோர் கூறுகின்றனரோ அவருக்கு அந்த டைட்டில் ஒடுக்கப்பட்ட அவரது கட் அவுட்டில் ஒட்ட வேண்டும். உதாரணமாக ‘துன்பம் மறந்து வாழ்’, ‘ஊருடன் ஒட்டி வாழ்’, காலத்தை அழியேல்’ என்ற வாசகங்கள் இருந்தது. இதில் அனைவரும் தங்களுக்கு தோன்றிய கருத்தை கூறினர். ரியோ, சோம், ஷிவானி ஆகியோர் இயல்பாக கூறினர். ஆரி, பாலாஜி, ரம்யா ஆகியோர் எப்பவும் போல மாறி மாறி குறை கூறினர், அவர்களுக்குள் உள்ள நல்ல கருத்துகளையும் முன் வைக்க தவறவில்லை.
மேலும் சோம் சேகருக்கு ஆதரவாக அவரிடம் உள்ள நல்ல குணத்தை அனைவரும் பாராட்டினர். இந்த டாஸ்க் நேற்று தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இந்த டாஸ்க் இன்று மீண்டும் தொடங்குவது தற்போது வெளியாகியுள்ள முதல் ப்ரோமோவில் தெரிகிறது. ஆனால் ப்ரோமோவில் ஆரி – ரம்யா இடையே வாக்குவாதம் நடைபெறுகிறது. அதில் ரம்யா நேற்று ஒரு விஷயம் கூறினார்கள், சேப் கேம் என்ற விஷயத்தை நான் தான் கூறினேன் என்று, என ஆரி கூறுகிறார்.
அப்போது ரம்யா குறுக்கிட்டு சேப் கேப் அல்ல, ஒரு பக்கமாக விளையாடுவதாக கூறினீர்கள் என்று தான் சொன்னேன் என்கிறார். அதற்கு ஆரி, நான் பேசும் போது நீங்கள் குறுக்கிடக் கூடாது என்பது விதி, உங்களை குறை கூறும்போது அதனை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் வேண்டும் என்கிறார். இதையடுத்து ரம்யா அமைதியாக தலையை குனிந்தவாறு அமரும் காட்சிகள் உள்ளது. நேற்று நடைபெற்ற டாஸ்கில் ஏராளமான நெகடிவ் வாக்கியங்களுக்கு ரம்யா, ஆரியை தேர்வு செய்திருந்தார். குறிப்பாக “தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே… ” என்ற வாக்கியத்திற்கு ரம்யா, ஆரியை தேர்வு செய்து என்னை ஒரு பக்கமாக விளையாடுதாக கூறினார், அது இப்போது வரை வடுவாக இருக்கிறது என்றார். ரம்யா இவ்வாறு கூறியதற்கு இன்று ஆரி விளக்கம் கொடுக்கிறார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த டாஸ்கில் யார் வெற்றி பெறுவார் என இன்றைய நிகழ்ச்சியில் தெரியவரும்.