திருகோணமலை-கந்தளாய் பிரதான வீதி தம்பலகாமம் சந்தியில் இராணுவ கெப் வாகனமும் முச்சக்கர வண்டியும் மோதி விபத்திற்குள்ளானதில் 2 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
முச்சக்கர வண்டியில் பயணித்த இருவரே இவ்வாறு படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இவ்விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த தம்பலகாமம்- பாரதிபுரம் பகுதியைச் சேர்ந்த இப்பவே சித்தரவேல் லோகராணி (52 வயது) மற்றும் முருகேசு சித்தரவேல் (54 வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்து நேற்றிரவு (09) ஒன்பது முப்பது மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பம் தொடர்பில் தெரியவருவதாவது, கந்தளாயிலிருந்து திருகோணமலை நோக்கி வந்து கொண்டிருந்த வாகனம் முச்சக்கர வண்டியுடன் மோதியதினாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் இராணுவ வாகனத்தின் சாரதியை கைது செய்துள்ளதாகவும் தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர் சீனக்குடா இராணுவ முகாமில் கடமையாற்றும் லாஸ் கோப்பல் அம்பாறை – உஹன பகுதியைச் சேர்ந்த இந்திக்க சதறுவன் அபேகோன் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, விபத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை இன்றைய தினம் கன்தளாய் நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.