ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாசவை நிறுத்துவதற்கு ஆதரவு தெரிவித்து மாத்தறையில் நடைபெறும் பேரணியில் பெருந்திரளான மக்கள் அணி திரண்டுள்ளனர்.
குறித்த பேரணி மாத்தறை சனத் ஜெயசூரிய மைதானத்தில் ஆரம்பமாகியுள்ளது.
பொதுஜன பெரமுன மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகிய கட்சிகள் தங்களது ஜனாதிபதி வேட்பாளரை அறிவித்துள்ளன. ஆனால் ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
இந்நிலையில் சஜித்துக்கு பெரும்பாலானோர் ஜனாதிபதி வேட்பாளராக ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், ஆதரவு திரட்டும் பேரணிகளும் இடம்பெற்று வருகின்றன.
இவ்வாறு முதலாவது பேரணி, அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தலைமையில் அண்மையில் பதுளை நகரில் நடத்தப்பட்டது. இதன்போது பெரும்பாலான மக்கள் ஆதரவு வழங்கியிருந்தனர்.
இதையடுத்து சஜித்துக்கு ஆதரவு தெரிவிக்கும் இரண்டாவது பேரணி மாத்தறையில் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.