Pearl One News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • உலகம்
    • இந்தியா
    • விளையாட்டு
    • சினிமா
  • திருகோணமலை
  • நாவல்
    • சரித்திர நாவல்
    • சிறுகதை
  • சமையல்
  • சுகமான வாழ்வு
  • இன்றைய ராசிபலன்
  • ENGLISH
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • உலகம்
    • இந்தியா
    • விளையாட்டு
    • சினிமா
  • திருகோணமலை
  • நாவல்
    • சரித்திர நாவல்
    • சிறுகதை
  • சமையல்
  • சுகமான வாழ்வு
  • இன்றைய ராசிபலன்
  • ENGLISH
No Result
View All Result
Pearl One News
No Result
View All Result
Home ஆரோக்கியம்

மாதவிலக்கு வரலன்னா இதை சாப்பிடுங்க உடனே வந்திடும், ஆனா அளவா சாப்பிடுங்க!

Admin PearlOne by Admin PearlOne
July 25, 2020
in ஆரோக்கியம்
3 min read
35
SHARES
351
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
மாதவிலக்கு வரலன்னா இதை சாப்பிடுங்க உடனே வந்திடும், ஆனா அளவா சாப்பிடுங்க!

பழங்களில் அனைவருக்கும் பிடித்த பழம், விலை குறைந்த இனிப்பு நிறைந்த பழங்களில் பப்பாளியும் ஒன்று. பப்பாளிப்பழம் போன்று பப்பாளி காயும் நன்மை தரக்கூடியது.

உணவுகள் மூலம் தான் உடலின் ஆரோக்கியத்தை பெறமுடியும் என்று அறிவுறுத்துகிறார்கள் மருத்துவர்கள். அன்றாட உணவில் சத்து நிறைந்த சமச்சீரான உணவு மிகவும் அவசியம். அரிசி உணவோடு அதிக அளவு காய்கறிகளும், பழங்களும் அவசியம் எடுத்துகொள்ள வேண்டும். பழங்கள் பலவும் காய்களாக இருக்கும் போதும் நன்மை தரக்கூடியதுதான். அந்த வகையில் பப்பாளிப்பழத்தை காயாக இருக்கும் போதும் எடுத்துகொள்ளலாம்.

பப்பாளிப்பழத்தைக் காட்டிலும் காயாக இருக்கும் போது எடுத்துகொண்டால் அவை நன்மை செய்யுமா? எந்த மாதிரியான பலன்களை கொடுக்கும், யாரெல்லாம் எடுத்துகொள்ளலாம். யாரெல்லாம் தவிர்க்கலாம் என்பது குறித்து தெரிந்துகொள்வோம்.

பப்பாளி

i


ஒவ்வொரு பழங்களும் குறிப்பிட்ட சீஸனில் மட்டுமே கிடைக்கும். சில பழங்கள் எல்லா காலங்களிலும் கிடைக்கும். அந்த வகையான பழங்களில் பப்பாளியும் ஒன்று. பப்பாளி எல்லா காலங்களிலும் கிடைக்க கூடிய பழம். விலை மலிவானது, அதிக இனிப்புத்தன்மை கொண்டது.

குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவருக்கும் இது பிடிக்கும். வருடம் முழுக்க கிடைக்கும் பழம் என்பதோடு இதில் வைட்டமின் ஏ சத்து அதிகளவு உள்ளது. வாரம் இருமுறையாவது பப்பாளி எடுத்துகொண்டால் நோய்த்தொற்றுகளிலிருந்து பெருமளவு விடுபட முடியும்.

பலவிதமான நன்மைகளை அள்ளித்தரும் பப்பாளி பழமாகும் வரை காத்திருக்க வேண்டியதில்லை. காயாக இருக்கும் போதே சாப்பிட தொடங்கலாம். அப்படியே சாப்பிடமுடியாது அவ்வளவு தான். இந்த காய்கள் தரும் நன்மைகள் குறித்து தெரிந்துகொள்வோம்.

​புண், காயம்

g

வாய்ப்புண்ணுக்கு கைவைத்தியம் பப்பாளிக்காயிலிருந்து வெளிவரும் பால் தான். வாய்ப்புண் பிரச்சனையால் தவித்துவருபவர்கள் பப்பாளிக்காயை நறுக்கினால் வெளிவரும் பாலை புண்ணின் மீது தடவினால் புண்ணை விரைவில் ஆற்றும்.

வெட்டுகாயம், புண், ரத்தகாயம் உண்டாகும் போது அவை தீவிரமாகாமல் இருக்க பப்பாளிக்காயின் பாலை தடவி வரலாம். இதனால் அடிபட்ட இடங்களின் மீது அதிக தொற்று பரவாது. வளரும் குழந்தைகளுக்கு தலையில் புண் போன்ற பிரச்சனை உண்டாகும் போது பப்பாளி பாலை பூசி குளிப்பாட்டினால் புண் ஆறும். ரணம் இருக்காது.

​தாய்ப்பால் சுரப்பு

mother pearl one news

பிரசவித்த தாய்மார்கள் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் போது போதுமான அளவு தாய்ப்பால் சுரப்பு பெற வேண்டும். கர்ப்பக்காலத்தில் உண்டாகும் பலவீனம் பிரசவக்காலம் வரை தொடரும் போது குழந்தைக்கு சத்து மிக்க தாய்ப்பால் பற்றாக்குறையாகிவிட வாய்ப்புண்டு.

ஆரோக்கியமான உணவின் மூலமே பால் சுரப்பை அதிகரிக்க முடியும். தாய்ப்பால் சுரக்க வைக்கும் உணவுகளில் காய்கறிகளோடு பப்பாளி காயும் சேர்க்கலாம். பப்பாளி காயை கூட்டாகவோ, குழம்பில் காயாகவோ சேர்த்து ஒரு கப் அளவு சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்.

தினமும் இல்லையென்றாலும் வாரம் இரண்டு முறை இந்த காயை சாப்பிடலாம். பிரசவத்துக்கு பிறகு உண்டாகும் உடல் குளுமையை குறைக்கவும் வெப்பம் தரும் பப்பாளிக்காய் உதவும்.

​புழுக்கள் வெளியேற

ii

வயிற்று பூச்சிகளை அழிக்கும் அளவுக்கு வல்லமை கொண்டது பப்பாளிகாய். பப்பாளிகாயை நல்லெண்ணெயுடன் கலந்து பொரியலாக்கவும். இதை சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட வேண்டும். மாலை வேளையில் இரவு 8 மணிக்குள் சாப்பிட வேண்டும்.

மறுநாள் காலை குடலில் இருக்கும் வட்ட புழுக்கள் வெளியேறிவிடும். வயிற்றில் இருக்கும் புழுக்களை அழிக்க பப்பாளிகாயை மாதம் ஒரு முறை எடுத்துகொள்ளலாம். சிறுநீரை பெருக்கி உடலை பலமாக்கவும் இவை உதவும். கல்லீரல் வீக்கத்தை குறைக்கவும் செய்யும்.

​மாதவிலக்கு தூண்டும்

kk

மாதவிலக்கு சரியான நேரத்துக்கு வரவேண்டுமென்றால் மாத்திரைகளை அணுக வேண்டியதில்லை. பப்பாளிக்காயை சமைத்து இரண்டு நாட்கள் சாப்பிட்டு வந்தால் மாதவிலக்கு வரும்.

பப்பாளிக்காயை தோல் நீக்கி சிறுதுண்டுகளாக நறுக்கி பாசிபயறு , தேங்காய் சேர்த்து பொரியலாக்கி சாப்பிட வேண்டும். தொடர்ந்து இரண்டு அல்லது மூன்று நாட்கள் சாப்பிட்டால் மறுநாள் மாதவிலக்கு உண்டாகும். அதிகம் எடுக்க வேண்டாம்.

பப்பாளிக்காயை அரைத்து சாறாக்கியும் குடிக்கலாம். ஒரு தேக்கரண்டிக்கு மேல் குடிக்க கூடாது.

சேற்றுப்புண்

ee

கால் பாதங்களில் சேற்றுப்புண், பாத எரிச்சல், வறண்ட பாதம் போன்ற பிரச்சனைகள் இருப்பவர்களுக்கு இவை நிவாரணம் தரும். பப்பாளிக்காயிலிருந்து பெறப்படும் பாலுடன் சம அளவு பசும்பாலை காய்ச்சாமல் கலந்து சேற்றுப்புண் இருக்கும் இடத்தில் தடவ வேண்டும்.

தொடர்ந்து ஒரு மண்டலம் வரை தடவி வந்தால் நாள்பட்ட சேற்றுப்புண்ணும் குணமாகும். பாதங்கள் அழகு படும். இதை முகப்பரு இருக்கும் இடத்தில் தடவி வந்தால் பருக்கள் தழும்புகள் இல்லாமல் நீங்கும்.

​உடல் பருமனை குறைக்க

ggg

உடல் பருமன் குறைய விரும்புபவர்கள் எந்தவிதமான பயிற்சியும் உணவுகட்டுப்பாடும் இல்லாமல் குறைய விரும்பினால் அவர்களுக்கு பப்பாளி காய் உதவும்.

உடல் எடை எப்போதும் அதிகரிக்காமல் இருக்க விரும்புபவர்களும் வாரம் ஒரு முறை பப்பாளிக்காயை கூட்டு அல்லது குழம்பில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் எடை கட்டுக்குள் இருக்கும். அதிக எடையை கொண்டிருப்பவர்கள் உடல் எடை குறைவதை பார்க்கமுடியும்

பப்பாளிகாயை குழந்தைகளுக்கும், கர்ப்பிணிகளுக்கும் கொடுக்க கூடாது. கர்ப்பிணிகள் சாப்பிட்டால் கருச்சிதைவு ஊக்குவிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது

Previous Post

வேதன பிரச்சினைக்கான தீர்வும் வழங்கப்படும்!

Next Post

பேக்கரி போகாமல் வீட்லயே கேக் பாப்ஸ் எப்படி செய்யலாம்?

Next Post
பேக்கரி போகாமல் வீட்லயே கேக் பாப்ஸ் எப்படி செய்யலாம்?

பேக்கரி போகாமல் வீட்லயே கேக் பாப்ஸ் எப்படி செய்யலாம்?

பொட்டுக்கடலை முறுக்கு வீட்டிலேயே சுலபமாக செய்வது எப்படி?

பொட்டுக்கடலை முறுக்கு வீட்டிலேயே சுலபமாக செய்வது எப்படி?

பிரதமரின் மூன்று மகன்களும் துபாய் செல்கின்றனர்?
இலங்கை

பிரதமரின் மூன்று மகன்களும் துபாய் செல்கின்றனர்?

by Admin PearlOne
November 7, 2021
0

தற்போது கிரிக்கெட்டில் கவனம் செலுத்தி வரும் பிரதமரின் இளைய மகன் ரோஹித ராஜபக்ஷ துபாய் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பழைய செயின்ட் தாமஸ் கிரிக்கெட் அணியுடன் அவர் இந்தப்...

Read more
குளியாப்பிட்டி LOCKDOWN

நாட்டில் மீண்டும் பயணக் கட்டுப்பாடு? – சுகாதார பணிப்பாளர் வெளியிட்ட தகவல்

November 7, 2021
கர்தினாலுக்கு அரசாங்கம் மீது நம்பிக்கை இல்லையா? பீரிஸ் கூறும் தகவல்

மக்கள் வெளிநாட்டுக்கு செல்வது சிறந்த விடயம்..

November 7, 2021
  • சுகமான வாழ்வு
புதிய வகை கோவிட் தொற்று உங்களுக்கு ஏற்பட்டால் வீட்டிலேயே கண்டுபிடிப்பது எப்படி?
சுகமான வாழ்வு

புதிய வகை கோவிட் தொற்று உங்களுக்கு ஏற்பட்டால் வீட்டிலேயே கண்டுபிடிப்பது எப்படி?

by திருமலை தாசன்
April 27, 2021
0

இலங்கையில் தற்போது பரவும் கோவிட் மரபணுவின் விசேட அறிகுறியாக தொண்டை வலி மற்றும் ஏனைய அறிகுறிகள் ஏற்படுவதற்கும் முன்னர் நியுமோனியா ஏற்படுவதாக விசேட வைத்தியர் பிரசன்ன குணசேன...

Read more
சருமம், கேசம்… இதையெல்லாம் செய்யாதீங்க
சுகமான வாழ்வு

சருமம், கேசம்… இதையெல்லாம் செய்யாதீங்க

by Anu
December 26, 2020
0

சருமத்தை க்ளீன் ஆக்குறதா நினைச்சு, அடிக்கடி முகத்துக்கு ஸ்கிரப் பயன்படுத்தக் கூடாது. அது சருமத்தின் இயற்கையான எண்ணெய்ப்பசையை நீக்கிடும். மேலும், அது சருமத்துக்குக் கடுமையானதாவும் இருக்கும். முகத்தை...

Read more
  • சமையல்
பொட்டுக்கடலை முறுக்கு வீட்டிலேயே சுலபமாக செய்வது எப்படி?
சமையல்

பொட்டுக்கடலை முறுக்கு வீட்டிலேயே சுலபமாக செய்வது எப்படி?

by திருமலை தாசன்
July 25, 2020
0

முறுக்கு செய்ய வேண்டும் என்றால் அரிசியை கழுவி, உலர்த்தி, மாவு மில்லுக்கு சென்று, மாவு அரைத்து, அதன் பின்புதான் முறுக்கு செய்ய வேண்டும் என்ற எந்த அவசியமும்  இல்லை....

Read more
பேக்கரி போகாமல் வீட்லயே கேக் பாப்ஸ் எப்படி செய்யலாம்?
சமையல்

பேக்கரி போகாமல் வீட்லயே கேக் பாப்ஸ் எப்படி செய்யலாம்?

by திருமலை தாசன்
August 25, 2020
0

கேக் பாப்ஸ் உங்க பார்ட்டி கொண்டாட்டங்களை சுவைப்படுத்தக் கூடியது. இதை செய்ய நீங்கள் நிறைய செலவழிக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. மீதமுள்ள கேக் துகள்களைக் கொண்டே...

Read more
  • சினிமா
மேதகு; தொடக்கம்தான், முடிவல்ல – துணிச்சலுடன் வெளிவந்த தமிழ் திரைப்படம்!
சினிமா

மேதகு; தொடக்கம்தான், முடிவல்ல – துணிச்சலுடன் வெளிவந்த தமிழ் திரைப்படம்!

by Anu
June 30, 2021
0

உலகத் தமிழர்களின் ஒருங்கிணைப்புடன் இதுவரை யாரும் கையில் எடுக்காத உன்னத முயற்சியாக மேதகு திரைப்படம் வெளிவந்துள்ளது. புத்தம் புதியவர்களால் தீர்க்கமாக எப்படி இதைச் சாதித்துக் காட்ட முடிந்தது...

Read more
ஜகமே தந்திரம் திரைவிமர்சனம்
சினிமா

ஜகமே தந்திரம் திரைவிமர்சனம்

by Anu
June 19, 2021
0

நடிகர்தனுஷ்நடிகைஐஸ்வர்யா லட்சுமிஇயக்குனர்கார்த்திக் சுப்பாராஜ்இசைசந்தோஷ் நாராயணன்ஓளிப்பதிவுஸ்ரேயாஸ் கிருஷ்ணா மதுரையில் பரோட்டா கடையில் வேலை பார்த்து வருகிறார் நடிகர் தனுஷ். இவர் ஊரில் கொலை, கட்டப்பஞ்சாயத்து என சின்ன சின்ன...

Read more

Categories

  • English (3)
  • International (1)
  • Sports (2)
  • Sri Lanka (78)
  • Trincomalee (9)
  • Uncategorized (10)
  • அமானுஷ்யம் (8)
  • ஆன்மீகம் (102)
  • ஆரோக்கியம் (26)
  • இந்தியா (91)
  • இலங்கை (8,689)
  • உலகம் (263)
  • ஓகக்கலை (20)
  • சமையல் (9)
  • சரித்திர நாவல் (71)
  • சினிமா (98)
  • சிறுகதை (31)
  • சுகமான வாழ்வு (12)
  • ஜோதிடம் (291)
  • திருகோணமலை (451)
  • தொழில்நுட்பம் (7)
  • நீரிழிவு நோய் (3)
  • வணிகம் (32)
  • வரலாற்றுப் புதினம் (74)
  • விளையாட்டு (136)
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Contact us: editor@pearlonenews.com

© 2020 Pearl One News - Developed by WEBBRID.

No Result
View All Result
  • முகப்பு
  • சுகமான வாழ்வு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
    • சினிமா
  • திருகோணமலை
  • நாவல்
    • சரித்திர நாவல்
    • சிறுகதை
  • சமையல்
  • இன்றைய ராசிபலன்
  • ENGLISH

© 2020 Pearl One News - Developed by WEBBRID.