பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ, பிரதமர் பதவியிலிருந்து விலகியுள்ளதாக தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகளவிலான செய்திகள் பகிரப்பட்டு வருகின்றன.
மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக இருந்த சந்தர்ப்பத்தில், ஏற்பட்ட அரசியலமைப்பு குழப்பகர நிலைமையின் போது, சில காலம் மஹிந்த ராஜபக்ஸ, பிரதமராக பதவி வகித்திருந்தார்.
இதன்போது, அரசியலமைப்பு குழப்பகர நிலைமை வலுப் பெற்ற நிலையில், தனது பதவியை இராஜினாமா செய்வதற்கான தீர்மானத்தை அவர் எட்டியிருந்தார்.
இந்த தீர்மானத்தை அடுத்து, அப்போதைய பாராளுமன்ற உறுப்பினரும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் புதல்வருமான நாமல் ராஜபக்ஸ தனது டுவிட்டர் தளத்தில் பதிவொன்றை வெளியிட்டார்.
2018ம் ஆண்டு டிசம்பர் மாதம் 14ம் திகதி மாலை 7.02க்கு மஹிந்த ராஜபக்ஸவின் பதவி விலகல் தொடர்பிலான டுவிட்டர் பதிவை, நாமல் ராஜபக்ஸ தனது டுவிட்டர் தளத்தில் வெளியிடப்பட்டிருந்தது.
இதேவேளை, 2018ம் ஆண்டு டிசம்பர் மாதம் 15ம் திகதி மஹிந்த ராஜபக்ஸ, தனது இராஜினாமா கடிதத்தில் கையெழுத்திட்டார்.
இந்த இராஜினாமா தொடர்பிலான செய்தியை நியூஸ் பெஸ்ட் விசேட செய்தியாக ஒளிபரப்பியிருந்தது.
இந்த செய்தியின் வீடியோவும் தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ இன்று (15) மாலை இடம்பெற்ற நிகழ்வொன்றிலும் கலந்துக்கொண்டிருந்தமை, அவர் பதவி விலகவில்லை என்பதற்கு சான்றாக அமைகின்றது.

2018ம் ஆண்டு டிசம்பர் மாதம் பதிவான செய்தியே தற்போது பகிரப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது
நன்றி (TrueCeylon)