பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டுள்ளது.
தொடர்ந்து தூறலாக மழை பெய்து வருவதினால் போட்டி ஆரம்பிக்க தாமதமாகலாமென தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது கைவிடப்பட்டுள்ளதாக உத்தியோகபூர்வ தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கை அணி வீரர்களின் அச்சங்கள் மற்றும் எதிர்ப்புக்களை கடந்து பாகிஸ்தானுக்கான கிரிக்கெட் விஜயத்தினை முன்னெடுத்துள்ளது.
இந்த நிலையில், இன்று கராச்சி நகரில் ஆரம்பமாக வேண்டிய போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டுள்ளது.