பண்டாரவளை சிறுவர் இல்லமொன்றிலுள்ள ஐந்து வயதுக்கு குறைவான 27 சிறுவர்கள் உள்ளிட்ட 32 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பண்டாரவளை சுகாதார வைத்திய அதிகாரி D.M.A.R.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
சிறுவர் இல்லத்தில் கடமைகளில் ஈடுபட்டிருந்தவர்கள் உள்ளிட்ட 52 பேருக்கு நடத்தப்பட்ட ரெபிட் அன்டிஜன் பரிசோதனைகளில், 32 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.
தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்கள், வைத்திய கண்காணிப்பு மற்றும் ஆலோசனைகளின் கீழ் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிடுகின்றார்.
இந்த சிறுவர் இல்லத்தில் ஐந்து வயதுக்கு குறைவான சிறுவர்கள் இருக்கின்றமையினால், இந்த சிறுவர் இல்லம் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டியுள்ளதாக பண்டாரவளை சுகாதார வைத்திய அதிகாரி தெரிவிக்கின்றார்.