மன்னார் மடுக்கரை முள்ளித்தோட்டம் மீனவர்களின் பிரச்சனைக்கு இன்றையதினம் வன்னி பாராளுமன்ற உறுப்பினரும் வவுனியா ஒருங்கிணைப்பு குழு இணைதலைவருமான கு. திலீபனால் தீர்வு பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.
நேற்று (16) மன்னார் மடுக்கரை முள்ளித்தோட்டம் பகுதிக்கு சென்ற பாராளுமன்ற உறுப்பினர் அங்கு மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் தொடர்பில் கலந்துரையாடியிருந்தார்.
இதன்போது அப்பகுதி மீனவர்கள் மீன்பிடி இறங்குதுறை இன்றி தாம் பெரும் இன்னல்களுக்கு முகம்கொடுப்பதாக தெரிவித்ததுடன் மீனவர் சங்கம் ஒன்று இல்லாத காரணத்தினால் பல்வேறு இடர்பாடுகளுக்கு முகம் கொடுப்பதாகவும் தெரிவித்தனர்.
இதனையடுத்து மீனவர்களுக்கு இறங்குதுறை அமைப்பதற்கு ஏதுவான நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன் மீனவர் சங்கமும் உருவாக்கப்பட்டது.
இதன்பிரகாரம் அருவி மீனவர் சங்கம் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டதுடன் அதற்கான நிர்வாகத்தெரிவும் பாராளுமன்ற உறுப்பினர் கு. திலீபன் முன்னிலையில் இடம்பெற்றது.
