மன்னார் தலைமன்னார் பகுதியிலிருந்து சந்தேகத்திற்கு இடமான வகையில் கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தலைமன்னார் ஓலைத்தொடுவாய் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் வீதி அபிவிருத்தி பணிகளுக்காக கொட்டப்பட்ட கிரவல் மண்ணில் இருந்து இந்த கைக்குண்டு நேற்று வியாழக்கிழமை மீட்கப்பட்டுள்ளது.
குறித்த கைக்குண்டை கண்ட ஊழியர்கள் பொலிசாருக்கு அறிவித்தமையை தொடர்ந்து இந்த கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் இந்த சம்பவத்தை தொடர்ந்து ஓலைத்தொடுவாய் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.