திருகோணமலை – மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மேம்காமம் பகுதியில் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்ட நிலையில் நேற்று வியாழக்கிழமை இரவு பெண்ணொருவர் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு காயமடைந்தவர் 35 வயதான, நான்கு பிள்ளைகளின் தாயாரான டி. தேவிகா எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் குறித்து தெரியவருவதாவது மதுபோதையில் கணவர் தனது மனைவியை கூரிய ஆயுதத்தினால் குத்தி தாக்குதல் நடத்தியதையடுத்து இரத்தம் வழிந்தோடிய நிலையில் மூதூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, கணவர் பொலிசாரினால் தேடப்பட்டு வருகின்ற நிலையில் தலைமறைவாகி இருப்பதாகவும் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
அத்துடன், குறித்த தற்பொழுது திருகோணமலை பொது வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.