ஒட்டு மொத்த உலகத்திற்கும் 20 சதவீதமான மழையை பெற்றுத் தரும் அமேசன் காடுகளில் கடந்த சில் வாரங்களுக்கு மன்னர் பாரிய காட்டுத்தீ ஏற்பட்டது.
இந்த காட்டுத்தீயினால் இதுவரை பல இலட்சக்கணக்கான மரங்களும், விலங்குகள், பறவைகள் மற்றும் ஊர்வன உள்ளிட்ட பலவகைப்பட்ட உயிரினங்கள் அழிவடைந்திருந்தன.
இந்த நிலையில், இந்த காட்டுத் தீயானது தற்போது இயற்கையின் கருணையினால் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
ஆம், கடந்த சில வாரங்களுக்கு முன்னர் மனதர்களின் தலையீட்டினால் அமேசன் காடு பற்றியெரிய தொடங்கியது, நேரம் கடக்க கடக்க வீரியம் அதிகமாகி தொடர்ந்து பரவிக்கொண்டிருந்த காட்டுத்தீயினை கட்டுப்படுத்துவதற்கு பிரேசில் அரசாங்கம் திணறிக்கொண்டிருந்தது.
அமேசான் மழைக்காடுகளில் பற்றி எரியும் காட்டுத்தீயை அணைக்கும் முயற்சியில் பிரேசில், பராகுவே, பெரு, கனடா உள்ளிட்ட நாடுகளின் வீரர்கள் தீயணைப்பு வாகனங்கள் சகிதம் கடந்த சில நாட்களாக பெரும் முயற்சி செய்தனர். மேலும் ஹெலிகொப்டர் மற்றும் இராணுவத்துக்கு சொந்தமான விமானங்கள் மூலம் தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டு தீயை அணைக்க முயற்சிகள் செய்யப்பட்டது.
ஆனால் அமேசான் காட்டி பல ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவுக்கு தீ பரவியதால் தீயை கட்டுப்படுத்துவது தீயணைப்பு வீரர்களுக்கு பெரும் சவாலான விஷயமாக இருந்தது. அமேசான் காட்டில் இருந்த பல அரிய மரங்கள் மற்றும் உயிரினங்கள் தங்கள் கண்முன்னே தீயில் கருகியதை தீயணைப்பு வீரர்களால் வேடிக்கை பார்க்க மட்டுமே முடிந்தது.
இவ்வாறான ஒரு நிலையில், மனிதர்களால் அணைக்க முடியாத தீயை அணைக்கும் விதமாக மழை பெய்ய வேண்டும் என மனிதர்களால் பிரார்த்தனைகாள் செய்யப்பட்டன.
இந்த பிரார்த்தனை பலிக்கும் வகையில் நேற்று அமேசான் காட்டில் சுமார் 4 மணி நேரம் கனமழை பெய்தது. இதனால் தீ மேலும் பரவுவது தடுக்கப்பட்டு, இதமான சூழல் நிலவியது. இதனால் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
இயற்கை அன்னை தன்மீது பரவி பற்றியெரியும் நெருப்பின் அனலை தாங்கமாட்டாமல் பெருமழையின் மூலம் காட்டுத்தீயை அனைப்பதற்கு உதவி புரிந்துள்ளாள் என்று சொல்வது மிகையாகாது.