திருகோணமலை-மரத்தடி பகுதியில் அமைந்துள்ள பிரபல சைவ உணவகத்தில் ஊழியராக கடமையாற்றி வந்த ஒருவரின் உண்டியல் திருடப்பட்டுள்ளதாக திருகோணமலை தலைமையக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
திருகோணமலை மனிஸ்கபே என்ற சைவ உணவகத்தில் கடந்த பல வருடங்களாக தான் ஒரு வேட்டராக அதாவது ஊழியராக வேலை செய்து வந்ததாகவும் உணவகத்துக்கு வருபவர்களை சிறந்தமுறையில் கவனிப்பதால்ங நன்கொடையாக சிறிய தொகையை அன்பளிப்பாக வழங்கி வருவதாகவும் அதனை தான் உண்டியலில் போட்டு வந்ததாகவும் இன்றைய தினம் அந்த உண்டியலை திருடி சென்றுள்ளதாகவும்- திருடிய நபரிடமிருந்து பணத்தைப் பெற்றுத் தருமாறு கோரியே பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இவ்வாறு முறைப்பாடு செய்துள்ளவர் மூதூர்- சேனையூர் ஆறாம் வட்டாரத்தைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான நாகலிங்கம் சுந்தரமூர்த்தி (சங்கர்) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் குறித்து தெரியவருவதாவது கடையில் சிசிடி கேமரா பொருத்தப்பட்டிருக்கின்றன நிலையில் நேற்றைய தினம் உணவகத்தை சுத்தம் செய்து கொண்டிருந்த போது ஒருவர் உண்டியல் காணப்பட்ட பகுதிக்கு சென்றுள்ளதை அவதானித்துள்ளதாகவும், உண்டியல் திருடப்பட்டமை தொடர்பில் தெரிந்திருக்காத நிலையில் இன்றைய தினம் சேர்த்த பணத்தை உண்டியலில் போடுவதற்காக சென்று பார்த்தபோது அந்த உண்டியல் காணாமல் போயுள்ளதாக தெரியவந்ததாகவும் கடை உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து திருகோணமலை தலைமையக பொலிஸார் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து விசாரணைகளை மேற்கொண்டு சிசிடி கெமரா பொருத்தப்பட்டிருந்த நிலையில் அதனை சோதனையிட்டபோது கடைக்கு வரும் போதைப்பொருள் பாவனையாளர் ஒருவரை சந்தேகிப்பதாகவும் அவரே அப்பகுதிக்குள் நேற்றைய தினம் சென்றுவந்ததை காணக்கூடியதாக இருந்தது.
இதனையடுத்து உண்டியலை திருடிய சந்தேக நபரை கைது செய்யும் நடவடிக்கையில் திருகோணமலை தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.