மணலாறு- நிக்கவெவ பகுதியில் பெறுமதி வாய்ந்த பிள்ளையார் சிலையொன்று காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பிரதேசத்திலுள்ள பெரும்பான்மையின மக்களால், இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட, மிகவும் பெறுமதியான பிள்ளையார் சிலையே இவ்வாறு காணாமல் போயுள்ளதென தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தப் பிரதேசத்தில் நெல் அறுவடையின் பின்னர், பெறப்படும் அரிசியை முதன் முதலாகக் குறித்த பிள்ளையார் சிலைக்கே படைத்து பூஜை செய்வதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, காணாமல் போன பிள்ளையார் சிலையை கண்டுபிடிப்பதற்கான, விசாரணைகளை வெலிஓயா பொலிஸார் முன்னெடுத்து வருவகின்றனர்.